Kichu Kichu Thambulam game.
கிச்சி கிச்சி தாம்பூலம்.....
கிய கிய தாம்பூலம்......
குச்சியை மண்ணுக்குளே மறைச்சாச்சி.......
குச்சி எங்கே இருக்கு கண்டுபுடி.......
Kichu kichu tambulam....
Kiya kiya tambulam
Kuchiya manukuleeee... Marachachu...
கிச்சுக்கிச்சுத் தம்பலத்தை இரண்டு பேர் மட்டுமே ஆடமுடியும். சிறுமியர் சிறுவர் யார் வேண்டுமானாலும்ஆடலாம். பெரும்பாலும் சிறுமியர் ஆடுவர். ஆடும் இருவருக்கும் தோழர்கள்/தோழியர்கள் உண்டு.
திறந்த வெளிகளில்ஆடப்படும் ஆட்டம்.இதை ஆட, ஒன்று அல்லது ஒன்றரை அடி நீளமுள்ள மணற்கரை அமைப்பர்; அதுஒரு 4 அல்லது 5 அங்குல உயரம் உள்ளதாக இருக்கும். அதில், அரை அல்லது ஒரு அங்குல நீளம்உடைய மெல்லிய குச்சியை (சிறு கிளிஞ்சல்/ சங்கு /புளியங்கொட்டை /சிறு ஓடு/ துடைப்பம் குச்சி போன்றவற்றையும் பயன்படுத்துவர்) ஒருவர் மறைத்துவைக்க, மற்றவர் அதைக் கண்டு பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பலம்.
மணற்கரையை ஆக்கி வைத்து, முதலில் யார் ஆடுவது என்று ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். யார் முதலில் மறைத்து வைப்பது என்பதில் முடிவு ஏற்படாவிடில், காசெடுத்து பூவா தலையா போடுவதைப் போல, ஓட்டாஞ் சில்லை எடுத்து, ஒரு புறத்தை ஈரமாக்கி(நக்கி ) , "எச்சா மானமா" என்று கேட்டு, வெல்பவர் முதலில் ஆட ஆரம்பிப்பார்.
ஆடு கருவியானகுச்சியை, எதாவது ஒரு கையின் இருவிரல்களில் பிடித்து (கட்டை விரல், ஆள்காட்டிவிரல்),மணற்கரையின் ஒரு முனையில் அவ் விரல்களை நுழைத்து வைத்திருப்பார். மற்றொரு கையில் அந்தஇரு விரல்களையும் மறுபுறத்தில் நுழைத்து வைத்திருப்பார்.
"கிச்சுக்கிச்சுத் தம்பலம் கீயாக் கீயாத் தம்பலம் மச்சு மச்சுத் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்"என்று பாடிக் கொண்டே, திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே குச்சியை இரு கைகளுக்கிடையே மாற்றியோ, மாற்றாமலோ, அந்த மணற்கரையின் முழுநீளத்திற்கும், முன்னும் பின்னுமாய் போயும் வந்தும்,எதிரே அமர்ந்திருப்பவர் பார்த்துக் கொண்டே யிருந்தாலும், மணலுக்குள் தெரியாதாதலால்,ஏதோ ஒரு இடத்தில் குச்சியை மறைத்து வைப்பார்.
மறைத்துவைத்தும், முன்னும் பின்னும் போய் வந்து போக்க்குக் காட்டுவது உண்டு; முன்னர் மறைத்தஇடத்தில் இருந்து திறமையாக மாற்றி வைப்பதும் உண்டு.இப்படி மணலுக்குள் மறைத்து வைத்தபின்,அடுத்தவர் எந்த இடத்தில் இருக்கிறது என்று நினைக் கிறாரோ, அந்த இடத்தில், தன் இரண்டுகரங்களையும் பிணைத்து,குச்சி இருக்கும் மணற்கரையின் இடத்தைப் பொத்த வேண்டும்.
எங்கள் telegram குழுவில் இணைந்திருக்க
https://t.me/joinchat/NotU0RvVyjlOBcC...
மறைத்துவைத்தவர், பாடிக் கொண்டே, முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருந்த போது, அவரின் கரஅசைவுகள், உடல் அசைவுகள், முக அசைவுகள் இவற்றைக் கூர்மை யாகக் கவனித்தால் தான், மற்றவர்அதை எளிதில் கண்டுபிடிக்க ஏதுவாகும். கரங்கள் பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால், எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர்வென்றார்.
வென்றவர்மீண்டும் மறைத்து வைப்பார். இப்படியாக ந்து அல்லது பத்து தடவை வென்றவர், ஆட்டத்தை வென்றவர்ஆகிறார். தோற்றவரின் கையைக் கூட்டி, (ஏந்துமாறு வைத்து) அதில் மணலை அள்ளி வைத்து, நடுவிலே அந்தசிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர், அவரின் கண்களைப் பொத்தி, அம்மணலை ஏந்தியவாறு,நடந்து கொண்டே, "அம்மாயி வீடு எங்க இருக்கு?" என்று கேட்க, வென்றவர், "ஆற்றுக்கு அங்கிட்டு" என்று சொல்வார்;
இப்படியே,இடம் குறித்த சில கேள்விகளை திருப்பி,திருப்பிக் கேட்டு, சிறிது தூரம் சென்றதும், அந்தஏந்து கை மணலையும், குச்சியையும் ஒரு இடத்தில் வைக்கச் சொல்வார்; கண்கள் இன்னும் பொத்தப்பட்டிருக்கும். மேலும் சிறிதுதூரம் சென்று, கண்களைப் பொத்தியபடியே, இரண்டு மூன்று முறை, மணல் வைத்த இடம் தெரியாமல்இருக்க, கண் பொத்தப் பட்டுள்ளவரை சுற்றி விடுவர். பின்னர்கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
Kuchi enga iruku kandupudi......
Best indoor children's game
Информация по комментариям в разработке