இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் | Iraivan Irandu Bommaigal song | K.J. Yesudas, Vani Jairam .

Описание к видео இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் | Iraivan Irandu Bommaigal song | K.J. Yesudas, Vani Jairam .

#shankarganesh #tamilsongs #kamal #sujatha #lovesongs #romantic #sad #4koldsongs
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் பாடல் | Iraivan Irandu Bommaigal song | K.J. Yesudas, Vani Jairam . Tamil Lyrics in Description .
Movie : Uyarnthavargal
Music : Shankar–Ganesh
Starring : Kamal Haasan, Sujatha
Song : Iraivan Irandu Bommaigal
Singers : K. J. Yesudas, Vani Jairam
Lyrics : Kannadasan
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண் : உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா

ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா

ஆண் : தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மைச் செய்தான்
துன்பங்கள் ஏனடா

ஆண் : உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

பெண் : உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா

பெண் : உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா

பெண் : தந்தை பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தை பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர் தானே
உயர்ந்தவர் இல்லையா

பெண் : என் வாய் மொழி முல்லை…
எனில் தாய் மொழி இல்லை…

பெண் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட

ஆண் : மலரும் போதே வாசம் தெரியுது
வளரும் போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே

ஆண் : மலரும் போதே வாசம் தெரியுது
வளரும் போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே

ஆண் : கந்தன் அன்று மந்திரம் சொன்னான்
கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு
மறைந்தது தொல்லையே

ஆண் : உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

இருவர் : இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு
பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
உன் வாய் மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை

Комментарии

Информация по комментариям в разработке