TAMIL OLD--Koovaamal koovum kokilam--VAIRAMAALAI

Описание к видео TAMIL OLD--Koovaamal koovum kokilam--VAIRAMAALAI

முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் :
**********************************************************
தமிழ் திரைஉலகின் முதல் பின்னணிப்பாடகரான திருச்சி லோகநாதன் அவர்கள்...24-7-1924-இல் திருச்சியில் பிறந்தார்... தந்தை பெயர் சுப்ரமணிய ஆச்சாரியார்... நடராஜ வாத்தியார் என்பவரிடம் இசை பயின்றார்... தனது அண்ணனும் (பெரியப்பா மகன்) அன்றைய பிரபல நாடகக் கலைஞரும் ராஜபார்ட் நடிகரும் ஆன "எம் எம் மாரியப்பா" அவர்களுடன் பல நாடகங்களில் நடித்தார்... பின்னாட்களில் ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார்... பழம் பெரும் நடிகை சி டி ராஜகாந்தம் அவர்களின் மகள் ராஜலக்ஷ்மி அம்மாளை மணந்து கொண்டார் ...

எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரி (1947)-இல் எம் ஜி ஆருக்கு எம் எம் மாரியப்பாவும், நம்பியாருக்கு திருச்சி லோகநாதனும் முதன் முறையாக பின்னணி பாடினார்கள்... அதுவே தமிழ் சினிமா சரித்திரத்தில் ஆண் பாடகர்கள் பாடிய முதல் பின்னணிப் பாடல்களாகும்... இதன் மூலம் எம் எம் மாரியப்பாவும், திருச்சி லோகநாதனும் தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப்பாடகர்கள் ஆனார்கள்...

1948-இல் வெளிவந்த "அபிமன்யு" படத்தில் இவர் யு ஆர் ஜீவரத்தினத்துடன் இணைந்து பாடிய "புது வசந்தமாமே வாழ்விலே" பாடல் மிகப்பெரும் புகழ் பெற்றது... 1949-இல் "கன்னியின் காதலி" யில் "புவி ராஜா என் ஆருயிர்" பாடலும் பிரபலமடைந்தது...அதை தொடர்ந்து வந்த "மந்திரி குமாரி" (1950) படத்தில் இடம் பெற்ற "வாராய் நீ வாராய்" , "உலவும் தென்றல்" பாடல்கள் தலைமுறைகளை தாண்டி என்றும் ஒலிக்கும் பாடல்களாகியது...

திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பிரபலமான பாடல்கள் சில...
*********************************************************************************
புது வசந்தமாமே வாழ்விலே - அபிமன்யு -    • TAMIL OLD--Puthu vasanthamaame vaazhv...  
உலவும் தென்றல் - மந்திரி குமாரி
பேரின்பமே வாழ்விலே - தேவகி -    • TAMIL OLD SONG--Perinbame vaazhvile(v...  
கூவாமல் கூவும் - வைரமாலை -    • TAMIL OLD--Koovaamal koovum kokilam--...  
சின்னக்குட்டி நாத்தனா - ஆரவல்லி
இனிதாய் நாமே இணைந்திருப்போமே - காலம் மாறிப்போச்சி -    • TAMIL OLD--Inithaai naame inainthirup...  
சின்ன அரும்பு மலரும் - பங்காளிகள் -    • TAMIL OLD--T.L--Chinna arumbu malarum...  
வாழ்க்கையின் பாடம் - இவன் அவனேதான்
****************************************************

Комментарии

Информация по комментариям в разработке