திருவாரூர் தியாகராஜர் பாத தரிசனம் பங்குனி உத்திரம் 25.3.24Thiyagarajar Padadarisanam Panguni Uthiram

Описание к видео திருவாரூர் தியாகராஜர் பாத தரிசனம் பங்குனி உத்திரம் 25.3.24Thiyagarajar Padadarisanam Panguni Uthiram

#thiruvarur #thiagaraja #thiruvathirai #Padadarisanam #Arutradarisanam #Ajabanatanam #திருவாரூர் #திருவாதிரை #தியாகராஜர் #பாததரிசனம் #அஜபா நடனம் #Seerudaiyan #panguniuthiram #padadarisanam2024

#seerudaiyan #thiruvarur #திருவாரூர் #thiagaraja #panguniuthiram #thiruvathirai #PadaDarisanam #பங்குனிஉத்திரம் #திருவாதிரை #பாததரிசனம்

சிவபெருமானின் சதாசிவ வடிவத்தின் ஐந்து திருமுகங்கள் தோறும் ஐந்து ஐந்தாக 25மகேசுவர வடிவங்களில் தோன்றி விளங்குகின்றன. அவற்றில் உச்சி முகமான ஈசான முகத்தில் தோன்றியதே சோமாஸ்கந்த வடிவம்.
விஷ்ணு பகவானுக்குப் புத்திரப்பேறு அருள்வதற்காக வெளிப்பட்ட மூர்த்தமே சோமாஸ்கந்த மூர்த்தம். சச்சிதானந்த ரூபம் எனப்படும் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் கந்தன் நடுவிலும் சிவபெருமானும், உமையவளும் இரு புறங்களிலுமாக ஒரே ஆசனத்தில் அமர்ந்திருப்பர். சத்-சிவனையும், சித்-சக்தியாகிய உமையவளையும், ஆனந்தம்-கந்தனையும் குறிக்கிறது. இந்தச் சோமாஸ்கந்த மூர்த்தமே சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருவாரூரில் தியாகராஜ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அந்த மூர்த்தியை விஷ்ணு பகவான் திருப்பாற்கடலுக்கு எடுத்துச் சென்று தன் நெஞ்சமென்னும் கோவிலில் இருத்தி நாகணையின் மேல் யோக நித்திரையில் ஆழ்ந்தார். விஷ்ணு பகவானின் நெட்டுயிர்ப்பின் அசைவால் அவரது நெஞ்சத்தில் வீற்றிருந்து சோமாஸ்கந்தர் அசைந்தாடிக் கொண்டிருக்கிறார். திருப்பாற்கடலின் அலைகளின் அசைவால் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் அனந்த சயனம் வலமும், இடமும் ஆடுவதுடன் அவரது யோக நித்திரையின் காரணமாக அவரது மார்பும் ஏறி இறங்குகிறது. இந்நிலையில் சோமாஸ்கந்தரும் வலம் இடமாகவும் அதே சமயம் மேலும் கீழுமாகவும் ஆடுகிறார். இதுவே ஆருர் தியாகேசனின் அஜபா நடனம் எனப்படுகிறது.
மூச்சை வெளியே விடுவதனாலும், உள்ளிழுப்பதனாலும் ஏற்படும் அசைவே அஜபா நடனம் ஆகும்.
திருமாலுக்கு சிவபெருமானால் அளிக்கப்பட்ட இளமுருகு உடனுறையும் அம்மையப்பராகிய சோமாஸ்கந்தத் திருமேனியை பள்ளி கொண்ட பெருமாள் தன் மார்பில் வைத்து பூஜித்ததாகவும், இதனால் ஈசன் மகிழ்ந்து தன் தேவியுடன் தோன்றி பாப விமோசனம் அளித்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
திருமால் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை இந்திரன் வேண்டிப் பெற்றதாகவும் பின்னர் முசுகுந்தன் அதனைப் பெற்று திருவாரூரில் ஸ்தாபித்ததாகவும் வரலாறு.
இம் மூர்த்தத்தில் தியாகேசனின் திருமுகத்தையும், அம்பிகையின் திருமுகத்தையும் மட்டுமே நாம் தரிசிக்க முடிகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் ஆபரணங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஆபரணங்களிடையே மறைந்துள்ளன. கந்தன் உருவமும் அலங்காரத்தின் பின்னே மறைந்துள்ளது.
மார்கழித் திருவாதிரைத் திருநாளில் ஈசனின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் தரிசிக்கலாம். தியாகேசர் உற்சவ மூர்த்தியாக வெளியே வரும்போது அவர் ஆடும் நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது.

Комментарии

Информация по комментариям в разработке