தவமிருந்தார் கிடைத்தது நிம்மதி திருமதி ஜெயந்தி ராம்கி -10-7-24 திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்

Описание к видео தவமிருந்தார் கிடைத்தது நிம்மதி திருமதி ஜெயந்தி ராம்கி -10-7-24 திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்

தினம் ஒரு பாமாலை :- 10-07-2024

எழுதியவர் :- திருமதி ஜெயந்தி ராம்கி

பாடியவர் :- திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் .

************************************

கல்யாணி ராகம்.


தினம் ஒரு பாமாலை
(2016 மே மாதம் முதல் இன்று வரை)

தவமிருந்தார் கிடைத்தது நிம்மதி
அதைத் தருவதுதான் பெரியவா உன் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!

ஓடிடும் பதமும் கரமதில் தண்டமும்
நாடிடும் மனதில் அருள்மழை பொழியும்
சிவ வடிவாகி சாந்தியும் தருமே
வேதமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!

அனுஷத்து பூஜையும் ஆராதனை அழகும்
நிமிஷத்தில் காண நலம் தானாய் சேரும்
கருணையின் உருவே நான் வணங்கும் தெய்வமே
பக்தியொடு தினம் தினம் துதிக்கும் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!
இதம் தரும் உன் சந்நிதி!

ஹரஹர சங்கர எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
ஜயஜய சங்கர என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

-ஜெயந்தி ராம்கி

10/07/2024

Комментарии

Информация по комментариям в разработке