அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு / திருக்குறள்/கடவுள் வாழ்த்து /மருத்துவர்,சி .இராமசாமி
குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
விளக்கம்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
‘’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’
‘’திருவள்ளுவரின் திருக்குறள்’’
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
திருக்குறள் என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். "திரு" என்பது தமிழில் மரியாதையைக் குறிக்கும் ஒரு சொல். இஃது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கவுரவமான, மற்றும் அழகான" என்று பொருள்படும் வடமொழிச் சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல்லாகும்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்-70 அதிகாரங்கள்
காமத்துப்பால்-25 அதிகாரங்கள்
அறத்துப்பால்
பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
பொருட்பால்
அரசியல்
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையில்
நட்பியல்
குடியியல்
காமத்துப்பால்
களவியல்
கற்பியல்
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
உலக பொதுமறையான திருக்குறளில் இல்லாத விஷயங்களே இல்லை,வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் திருவள்ளுவர் மிக அழகாக திருக்குறளில் தெளிவாக விளக்கியுள்ளார்,தேட தேட கிடைக்கும் அற்புத புதையலாய்,அல்ல அல்ல குறையாத அமுதாய்,பருக பருக தித்திக்கும் நீராய்,சுவைக்க சுவைக்க இனிக்குக்கும் தேனை,கரும்பை மிக அழகாக திருக்குறளை திருவள்ளுவர் வடித்துள்ளார்,அப்படிப்பட்ட வள்ளுவத்தை உலகிற்கு உணர்த்த தான் படித்த,அறிந்த,கேட்ட,பார்த்த விஷயங்களோடு அனுபவம் கலந்து நமக்கு எளிய நடையில் விளக்கமளிக்கிறார் நமது மருத்துவர் ஐயா திரு சி,இராமசாமி,அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
காமம் என்றால் ஆண் மீது பெண்னுக்கும், பெண் மீது ஆணுக்கும் உள்ள காதல் தான் என்று தோன்றும். ஆனால் பெரியோர்கள் அதாவது தவத்தில் உயர்ந்த நிலை நோக்கிப்பயணம் செய்கிறவர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள காதல் என்றும் சொல்லப்படுகிறது.
மிருகமாக பிறந்து மனிதனாக மாறுவோம், பின்பு கடவுளாக மாறுவோம். இதில் மிருகமாக அப்படியே இருந்துவிடுவோம். மனித தன்மையிலிருந்து மிருகத்தன்மையும் பின்பு தெய்வத்தன்மையும் வரலாம்.எப்படி வேண்டுமானலும் நடக்கலாம்.மிருகத்தன்மையிலிருந்து மனித தன்மைக்கும், மனித தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கும் மாறுவதற்க்கு வழி இத்திருக்குறளில் இருப்பதாக பெரியோர்களின் கூற்று.
அதிகாரம் ஒவ்வொன்றும் அனுபவத்தின் சொத்து. கடவுளை நோக்கி பயணம் செய்தால் குறளில் உள்ள பொருளின் சூட்சமம் புரியும்.தமிழின் அறிவு, இயற்கை அறிவு மற்றும் தவத்தினால் வரும் அநுபவம் சேரும் பொழுது திருக்குறள் தன் சூச்சமத்தை வெளிப்படுத்திவிடும்.
நன்றி
மருத்துவர்,சி .இராமசாமி
BNYS,PGDYN,M.D(AACU)C.H.M(HERBAL)
மதுமதி மூலிகை யோகா மருத்துவமனை
மற்றும் மதுமதி கல்வி நிறுவனங்கள் ,ஆராய்ச்சி மையம்.
நாகலாபுரம்,தேனி - 625534.
தமிழ்நாடு,இந்தியா.
போன் - 7826999905,9047853998.
DEDAILS;
MATHUMATHI HERBAL AND YOGA HOSPITYAL.
BALAKRISHNAPURAM VILAKKU,NAGALAPURAM,SRIRENGAPURAM POST.
THENI DIST-625534.
CELL;7826999905,9047853998.
EMAIL;[email protected].
YOUTUBE;
/ @theni-mathumathi2283
Информация по комментариям в разработке