Thiradchaiyur Thilagamey Yakapparey | திராட்சையூர் திலகமே யாகப்பரே | Mr.J.Ranjith | 4K | 2023.

Описание к видео Thiradchaiyur Thilagamey Yakapparey | திராட்சையூர் திலகமே யாகப்பரே | Mr.J.Ranjith | 4K | 2023.

#ilavalai #thiradchaiyurkalaikkoodam #srilanka
#catholicchurch #jesus #song #திருப்பலி
#திராட்சையூர் #ranjithkumar #thiradchaiyur
#இளவாலை #stjameschurch #feast

இளவாலை புனித யாகப்பர் ஆலய 144வது ஆண்டு விழா பாடல் வெளியீடு.

Song :- Thiradchaiyur Thilagamey Yakapparey
Lyrics :- Princy Ranjithkumar.
Singer :- Ammu Ranjithkumar.
Music :- G.Saitharsan.
Video Making :- G.Priyanthan.
Produced :- J.Ranjith (France).

அழகூர் எம் இளவாலை அதன் பாதுகாவலே!
நலம்வாழ அருள் தாரும் யாகப்பரே!
வாளேந்தி வெண்குதிரை மீதேறி வந்தெங்கள்,
சுமைதீர மன்றாடும் யாகப்பரே!
இறைவேதம் போதித்த இறைசாட்சியே!
அதற்காக தலையீந்த மறைசாட்சியே!
வினைநீங்க களம்கண்ட போர் வீரனே!
எம் உடன்வாரும் துணையாக படையாளியே!

திராட்சையூர் திலகமே யாகப்பரே - நீர்
காக்க தீமை விலகும் யாகப்பரே (2)

1) பன்னிரு சீடருள் இயேசுவுக்காய் முதல்
உயிர்ப்பலி தனையீந்த முதல் சீடனே!
உம்மிரு கரங்களுள் எம்மனக் குறை தந்தோம்
எங்களின் துயர்தீரும் யாகப்பரே!
இன்னல்கள் எமைநீங்கி இன்பமே நாம்காண
இறையோடு உறவாடும் யாகப்பரே!
துன்பங்கள், துயரங்கள் எதுவந்த
போதினும் உந்தனின் துணை வேண்டும் யாகப்பரே!
நாடினோம் தினந்தோறும் உன்பாதமே!
கூடினோம் உம்வாசல் எமைக்காருமே!

திராட்சையூர் திலகமே யாகப்பரே - நீர்
காக்க தீமை விலகும் யாகப்பரே (2)

2) இளவாலை இளவல்கள் இறையருள்
பணியாற்ற வழிகாட்டினீர் நன்றி யாகப்பரே!
அதுபோல ஆன்மீக பணிவாழ்வில் பலர்சேர,
இளையோர்க்காய் மன்றாடும் யாகப்பரே!
தொலைதூரம் புலம்பெயர்ந்து
வாழ்ந்தாலும் மனதாலே
உமைப்பிரியா எம்பங்கின் உம் பிள்ளைகள்
துயரேதும் சூழாது, நலமோடு தினம்வாழ
அருளாசீர் தருவீரே யாகப்பரே!
புகழ் பாடி வலம்வந்தோம் வரம் தாருமே!
இவ்-இகம் வாழ இறையாசீர் தனைக்கேளுமே!

திராட்சையூர் திலகமே யாகப்பரே - நீர்
காக்க தீமை விலகும் யாகப்பரே (2)


FACE BOOK LINK :-
  / thiradchaiyurkalaikkoodam  
https://www.facebook.com/profile.php?...

Комментарии

Информация по комментариям в разработке