யார் இந்த உஷா சிலுக்குரி வான்ஸ்? பரபர தகவல் | who is Usha Chilukuri Vance | America elections 2024

Описание к видео யார் இந்த உஷா சிலுக்குரி வான்ஸ்? பரபர தகவல் | who is Usha Chilukuri Vance | America elections 2024

நவம்பர் 5ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மல்லுக்கட்டுகின்றனர்.

உலகம் முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தேர்தல் இந்தியாவில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதற்கு காரணம் டிரம்ப் அறிவித்த துணை அதிபர் வேட்பாளர் பெயர் தான்.

குடியரசு கட்சி சார்பில் தனக்கு ஜோடியாக ஜேடி வான்ஸ் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜேடி வான்சா? யார் அவர்? அவருக்கும் இந்தியர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம்.

முக்கியமான ஒரு தொடர்பு இருக்கிறது. வான்ஸ் திருமணம் செய்திருப்பது ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை தான்.

அவரது பெயர் உஷா சிலுக்குரி வான்ஸ். இப்போது இவரது பெயர் தான் இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதிகம் தேடப்படுகிறது. # #UshaChilukuriVance | #Americaelections2024 #trump #jdvance #

Комментарии

Информация по комментариям в разработке