#flight #hiijacked #1999 #history #story #kidnapping
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவிலிருந்து, இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு புறப்படுதற்காக, இந்தியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஐசி 814 என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஏர்பஸ் ஏ300 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 250 பயணிகள் அமரலாம். அன்றைய தினம் 178 பயணிகள், 9 விமான பணிப்பெண்கள் மற்றும் பைலட், இணை பைலட்டுடன் குறித்த நேரத்தில் பயண இலக்கை நோக்கி விமானம் புறப்பட்டது.
அடுத்த 30வது நிமிடத்தில் இந்திய வான்வெளிக்குள் விமானம் நுழைந்தது. விமானப் பணிப்பெண்கள், வழக்கம்போல் பயணிகளுக்கு சிற்றுண்டிகளை வழங்கத் தொடங்கினர். நடந்ததைப் போல், நடப்பவையும் சரியாக நடந்திருந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானம் டெல்லியில் தரையிறங்கியிருக்கும். ஆனால், அன்று அவ்வாறு நடக்கவில்லை.விமானத்தின் மையப்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவன், தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு முகமூடியை எடுத்து அணிந்தான். தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துக் கொண்டான். யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் தன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த அவன், விமானத்தின் மையப்பகுதிக்கு சென்று விமானம் கடத்தப்பட்டிருப்பதாக அறிவித்தான்.
விமானம் கடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இந்தியாவுக்கு கொள்கை ரீதியாக எந்த முடிவும் இல்லாத அந்த சமயத்தில், பிரதமர் தலைமையிலான கூட்டத்தில், கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தீவிரமா ஆலோசிக்கப்பட்டது. அதிரடிப்படையினரை அனுப்பி பயணிகளை மீட்கலாமா என்பது குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட விமானத்திற்குள் இருந்தவர்கள், ஒரு அதிசயம் நிகழும் என்று காத்திருந்தனர். கடத்தல்காரர்கள் எரிபொருளுக்காக காத்திருந்தனர். விமான நிலைய அதிகாரிகள், டெல்லியிலிருந்து வரும் தகவலுக்காக காத்திருந்தனர். விமானத்தை சுற்றி மறைவிடத்தில் நிலை எடுத்திருந்த பஞ்சாப் காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் உத்தரவிற்காக காத்திருந்தனர். அந்தசமயம், அனைவருக்கும், ஒவ்வொரு நொடியும் பதற்றத்துடனே கழிந்தது.
அமிர்தசரசிலிருந்து புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் கடத்தப்பட்ட விமானம் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்தது. இன்னும் சில நிமிடங்கள் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் மிஞ்சியிருந்த சூழ்நிலையில் விமானம் லாகூர் விமான நிலையத்தை நெருங்கியது. தரைக்கட்டுப்பாட்டு தளத்தை தொடர்பு கொண்ட கேப்டன் தேவி ஷரன், தரையிறங்க அனுமதி கோரினார். ஆனால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்க பாகிஸ்தான் அனுமதி மறுத்தது. அனுமதியை மீறி விமானம் தரையிறங்கலாம் என்று கருதிய பாகிஸ்தான் அதிகாரிகள், ஓடுபாதையின் விளக்கை அணைத்தனர்.
செய்வதறியாத விமானி, விமான நிலையத்தை வட்டமடிக்கத் தொடங்கினார். எரிபொருளோ வேகமாக தீர்ந்து வந்தது. அதே நிலை நீடித்தால், விமானத்தை தரையில் மோதி இறக்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த தகவல் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு, விமானம் தரையிறங்க அனுமதிக்குமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது. அத்துடன், விமானம் லாகூரிலிருந்து தப்பித்து செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கந்தகரில் விமானம் தரையிறங்கியவுடன், தாலிபான் பாதுகாப்பு படையினர் விமானத்தை சுற்றி பாதுகாப்பாக நின்று கொண்டனர். தொடக்கத்தில் இது விமானத்திற்கான பாதுகாப்பு என்று கருதப்பட்டது. ஆனால், இந்திய அதிரடிப்படையினர் விமானத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காகவே தாலிபான்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதை இந்திய அதிகாரிகள் புரிந்துகொண்டனர்.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, கடத்தல்காரர்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஒப்புக்கொள்வதாக தாலிபான்கள் அறிவித்தனர். அதன் படி, பேச்சு வார்த்தை தொடங்கியது. தொடக்கத்தில் பல மில்லியன் டாலர் பணமும், இந்திய சிறைகளில் உள்ள 56 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கடத்தல்காரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இறுதியில், இந்திய சிறைகளில் உள்ள, ஹர்கத்வுல் அன்சார் அமைப்பின் பொதுச்செயலாளர் மௌலான மசூத் அசார், அகமது ஒமர் சய்யீத் ஷேக், முஷ்டாக் அகமது சர்கா ஆகிய மூன்ற பேரை விடுதலை செய்ய கடத்தல்காரர்கள் கோரிக்கைவைத்தது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
தாலிபான்களின் பாதுகாப்பு வளையத்தி மீறி, அதிரடிப்படையினரை பயன்படுத்தி இனி பயணிகளை மீட்க முடியாது என்ற நிலையில், பயணிகளை காப்பாற்ற அந்த மூன்று பேரை விடுதலை செய்வதை தவிர இந்திய அரசுக்கு வேறு வழி இல்லை என்ற சூழல் ஏற்பட்டது. வேறு வழியின்றி, இந்திய அரசு அந்த அதீத முடிவை எடுத்தது.
Информация по комментариям в разработке