Arunachala Mahimai 3 - By Mrs.Usha Narayan - Baraneedaran

Описание к видео Arunachala Mahimai 3 - By Mrs.Usha Narayan - Baraneedaran

பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர்: 1925-2020) ஆன்மிக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் . முதன்மையாக ஆன்மிகக் கட்டுரைத் தொடருக்காக நினைவுகூரப்படுகிறார்.

பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என். சேஷாசலம்-ருக்மிணி இணையருக்கு பிறந்தார். அவர் பிறந்த நாளன்று 'பரணி’ நட்சத்திரம் என்பதால், 'பரணீதரன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. பரணீதரனின் உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா. தம்பிகள் இருவர்.
தந்தை சேஷாசலம் தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், 'கலாநிலையம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார்.
வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தாலும் நாடகத்தாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார்.
கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பை நிறைவு செய்தார்
ஆனந்த விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் 'சென்னையில் பொன்மாரி’ என்பதாகும். அது 1957-ல் காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஆற்றிய உரைகளைத் தொகுத்து எழுதியது
1959-ல் பரணீதரனின் முதல் ஆலய தரிசனக் கட்டுரை 'நாகலாபுர தரிசனம்’ வெளியானது. 1968-ல் 'ஆலய தரிசனம்’ என்னும் தலைப்பில் தனது முதல் ஆன்மிகப் பயணத் தொடர் கட்டுரையை எழுதினார் பரணீதரன். பத்ராசலம், பண்டரிபுரம், நாசிக், ஷீரடி, மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அதன் மகத்துவம் பற்றியும் ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றியும் மிக விரிவாக அத்தொடரில் எழுதினார்.

பரணீதரனின் புத்தகங்களில் சில...
தொடர்ந்து விகடனில் 'அருணாசல மகிமை’, 'திருத்தலப் பெருமை’, 'ஸ்ரீமத்வரும் மடாலயங்களும்’ எனப் பல ஆன்மிகத் தொடர்களை எழுதினார். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து "பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்" என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். முத்துசுவாமி தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்கள் பற்றி விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து, பல்வேறு ஆதாரப்பூர்வமான தகவல்களைத் திரட்டி ’தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்’ என்ற தலைப்பில் அதனை நூலாக வெளியிட்டார். பரணீதரனின் இறுதி ஆன்மிகத் தொடர் காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி பற்றி எழுதிய அன்பே அருளே .அதை எழுதிக்கொண்டிருக்கையிலேயே மறைந்தார்
• மிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
• நாடக சூடாமணி விருதை கிருஷ்ண கான சபா வழங்கியுள்ளது.

Комментарии

Информация по комментариям в разработке