SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு

Описание к видео SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு

Credits:
Lyrics and Lead Vocalist: Sakthi Banumathy M, Ramanathapuram
Harmonies: Monika Murthy, Layashree
Music Arrangement: Sakthi Radhika Sivaraj
Programming and Mixing: Sasi Keys
Rhythm Programming: Edwin Selvaraj
Recordist: Senthamil, SCube Studioz
Camera: Sakthis - Rakesh, Malar, Indira
Choreography - Vijayan
Video Creative Head - Adithya Ravi
Video Editing - Srinath, Uma
Thumbnail - Surendar

1
தென்னை பூத்தத பாருங்கம்மா,
அது தெம்மாங்கு பாட்டுக்கு ஆடுதம்மா
தென்னம் பாளை போல முத்துமாரிக்கு,
சிவந்த குலவை போடுங்கம்மா

2
வாழை பூத்தத பாருங்கம்மா
வாழை வடக்க பூத்தத பாருங்கம்மா!
வாழைப்பூவைப் போல பங்காரம்மாவுக்கு
வளைஞ்சு கும்மிய கொட்டுங்கம்மா!

3
வடக்கு பாத்த வாசலிலே தாயி
வண்ணத் தலகாணி மெத்தயிலே
வாக்கு சொல்லுகிற பங்காரம்மாவுக்கு
எழுந்து குலவை போடுங்கம்மா

4
மருவத்தூருக்கே வாருங்கம்மா
அந்த மகாராணிய பாருங்கம்மா!
செல்ல நடை போடும் பங்காரம்மாவுக்கு
அன்ன நடை போட்டு ஆடுங்கம்மா!

5
சித்த வனத்துக்கு வாருங்கம்மா
அவ சிங்காரத் தோற்றத்தப் பாருங்கம்மா!
வேண்டுவதெல்லாம் கேளுங்கம்மா
நீ கேட்பதில் நியாயம் வேண்டுமம்மா!

6
மஞ்சக்குருவி அடைகாக்கும் அந்த
மருவதுரம்மா வாசலிலே
மாரி பொழியுற மாரியம்மனுக்கு
மங்கையரே கும்மி கொட்டுங்கம்மா!

7
வாடித் தவிக்கிற ஏழைகளே
இந்த ஆடிப்பூரத்திற்கு வாருங்களேன்!
பாடி அழைக்கலாம் பங்காரம்மாவ
கூடி கும்மிய கொட்டுங்கம்மா!



8
ஆடி நல்லதொரு மாதத்திலே – நாம
பாரி வளர்க்கணும் மன்றத்திலே
சக்தியுள்ள இந்த சக்தியம்மா நாம
பக்தி வச்சா காப்பா நிச்சயமா!

9
ஒட்டுட்ட எரிஞ்சு கிணறு வெட்டி
அங்க ஒன்பது மாசமா செங்கல்கட்டி
பஞ்சத்தை தீர்க்குற பங்காரம்மாவுக்கு,
வஞ்சியரே கும்மி கொட்டுங்கம்மா

10
சின்ன கிணத்துல கல்லு தூக்கி – அவ
சிங்காரப்பட்டை துவச்சுடுத்தி
சிரிச்சு வாராளே பங்காரம்மாவுக்கு
குதிச்சு கும்மிய கொட்டுங்கம்மா!

11
தீச்சட்டிய நம்ம கையில் ஏந்தி – அந்த
உத்தமியவள நெஞ்சில் ஏந்தி
தேவதை அவள சுத்தி வந்தா
நம்ம வேதனையெல்லாம் தீத்திடுவா!

12
பச்சரிசிக் கஞ்சி ஊத்தி வச்சு
அந்த வேப்பில்லை காரியை நெஞ்சில் வச்சு
மண் கலயத்துல ஏந்திக்கிட்டு
நீ தெம்பா வாடி மருவூருக்கு!

13
கஞ்சிக் கலயமாம் வாருங்கம்மா
கொஞ்சும் வஞ்சியவ முகம் பாருங்கம்மா!
பிஞ்சு மனசுள்ள பங்காரம்மாவே
தஞ்சம் என கும்மி கொட்டுங்கம்மா!

14
கருவறைக்குள்ளே வாருங்கம்மா
அவ கண் விழி அழகை பாருங்கம்மா!
கண்-ஜாடை காட்டுற பங்காரம்மாவை
கைதொழுதே கும்மி கொட்டுங்கம்மா!



15
அன்னை அவளுக்கு அபிஷேகம்
நம்ம செய்து வந்தா கோடி நன்மை சேரும்!
வஞ்சமுள்ள நஞ்சு எண்ணமெல்லாம்
அந்த பாலோடு பாலா ஓடி விடும்!

16
கன்னியராம் நாக கன்னியராம் கூட
சப்த கன்னியரும் ஏழு பேராம்!
சுத்தி வலம் வார பங்காரம்மாவுக்கு
சக்திகளே கும்மி கொட்டுங்கம்மா!

17
கோபால நாயக்கர் புத்திரராம்
அந்த ஆதிசக்தியோட பாலகராம்!
தொண்டு செய்வோருக்கு சேவகராம்
இந்த அண்டம் முழுவதும் ஆள்பவராம்!

18
மூணு பவுனுக்கு மிஞ்சி பண்ணி
அத முன்னூறு பொன்னுக்கு அரும்பேத்தி
காலுல போட்டா கனக்குதென்பா
காரியக் காரியாம் பங்காரம்மா!

19
நாலு திசையிலே நாலு கிளி
அது நட்சத்திரம் போலப் பேசுதடி!
பச்சக் கிளியெல்லாம் கிசுகிசுக்குது
பைய நடந்து வா பங்காரம்மா!

20
பட்டமரத்துல தொட்டிகட்டி – திரு
பாலகனையும் தாலாட்டி
பட்டமரமும் பால்மரமாகும்
பங்காரம்மா அவ கோவிலிலே!


21
கட்டை மரத்துல தொட்டிகட்டி - திரு
கைக்குழந்தய தாலாட்டி
கட்டைமரமும் தழைஞ்சுடுமே – இந்த
காளியம்மா அவ வாசலிலே!


22
சித்திரபுத்திர சாய பட்டு – நல்ல
செப்புக்குடத்துல வச்சடைச்சு
எடுத்து உடுத்துவா பங்காரம்மா
ஏத்தாப்பு போடுவா ஆதிசக்தி

23
மஞ்ச சீலையில மாராப்பூ
அவ மடிநிறையவே மல்லிகைப்பூ!
கொண்டை பெருத்த காளி அம்மா-வுக்கு
கொண்டாடக் கொண்டாட பூஞ்சிரிப்பு!

24
பௌர்ணமி தோறும் விளக்கேத்தி
அவ மூல மந்திரத்தை உருவேத்தி
சங்கடம் போக்குற பங்காரம்மாவுக்கு
சலண்டு கும்மிய கொட்டுங்கம்மா

25
தானத்திலயே சிறந்த தானம்
அம்மா ஆதிசக்தியோட அன்னதானம்!
இந்த மூலதனத்தை தினமும் நடத்துது
பங்காரம்மாவோட சன்னிதானம்!

26
உழைச்ச பணத்த சேர்த்து வச்சு அதில்
பத்தில் ஒருபங்கை எடுத்து வச்சு
குரு காணிக்கைய போட்டுவிட்டு
நம்ம ஊருக்கு போகணும் கும்பிட்டுட்டு

27
அம்மா சொன்ன அருள்வாக்குப்படி நம்ம
வாழ்ந்து காட்டணும் நல்லபடி
பாவ புண்ணிய கணக்கு எல்லாம்
அந்த ஆன்மாவுக்கே சொந்தமடி!


#melmaruvathur #guru #bangaruadigalar #amma #adhiparasakthi #omsakthi #ammasongs #devotionalsongs #aadipooram #kummi #kummisongs #kummiyattamtamil #dancevideo

Комментарии

Информация по комментариям в разработке