அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி கரும்பு விவசாயிகள்சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Описание к видео அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி கரும்பு விவசாயிகள்சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு செங்கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் மன்னார்குடி அருகே சாலையில் சமைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட மேலவாசல், நெடுவாக்கோட்டை, கீழநாகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பொங்கல் பண்டிகைக்கான செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகாலமாக தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லாமல் செங்கரும்பு வழங்கி வந்தது. இதற்கான செங்கரும்பினை அந்தந்த பகுதி செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்து வந்தது. அரசு ஆண்டுதோறும் செங்கரும்பினை கொள்முதல் செய்துவந்ததை அடிப்படையாககொண்டு நடப்பாண்டில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டைக்காட்டிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக செங்கரும்பு சாகுபடி பணியினை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டனர். ஆனால் வரும் பொங்கல் பண்டிகைக்காக அரசு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விலையில்லா செங்கரும்பு வழங்கிட எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்திருந்த விவசாயிகள் மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை என்ற இடத்தில் இரண்டாவலது நாளாக சாலையில் அடுப்பு வைத்து சமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மன்னார்குடி வட்டாட்சியர் நிகழ்விடத்திற்கு சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி-தஞ்சை, திருச்சி செல்லும் சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке