முள்ளு முருங்கை அடை || Mullu murungai adai making😋...

Описание к видео முள்ளு முருங்கை அடை || Mullu murungai adai making😋...

முள்ளு முருங்கை அடை தேவையான பொருட்கள்

முள்ளு முருங்கை

அரிசி

வெங்காயம்

உப்பு

பச்சை மிளகாய்

இஞ்சி

கறிவேப்பிலை

உப்பு

சீரகம்

பெருங்காயம்

செய்முறை

முள்ளு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கைபிடி முள்ளு முருங்கை இலை சரியாக இருக்கும்.

ஒரு கப் அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். கூடவே முள்ளு முருங்கை இலையை அதில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். மாவை வலுவலுவென அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்த மாவில் அரைக்கப் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு பச்சை மிளகாயையும் சேர்த்து கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் சீரகத்தை கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அரை ஸ்பூன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அரைத்த மாவை அடை போல் தட்டி வேக விட வேண்டும்.

Комментарии

Информация по комментариям в разработке