கோவை-அவினாசி சாலையில் மெட்ரோ ரயில் சாத்தியமா? புதிய தகவல்கள் | Coimbatore Metro

Описание к видео கோவை-அவினாசி சாலையில் மெட்ரோ ரயில் சாத்தியமா? புதிய தகவல்கள் | Coimbatore Metro

கோவை மக்களால் பல ஆண்டுகளாக அவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல் கட்டமாக 39 கி.மீ துாரத்துக்கு கோவை-அவினாசி சாலை மற்றும் கோவை-சத்தி சாலை என இரண்டு சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கிறார்களாம். இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் சந்தேகம் வந்துள்ளது. கோவையில் ஒரு வேலையையே ஒழுங்காக முடிக்க மாட்டார்கள். இதில் அவினாசி சாலையில் மற்றொரு பாலமா? கேட்கவே தலையை சுற்றுகிறது அல்லவா? அவினாசி சாலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு டேக் டைவர்சன் எடுக்க வேண்டும் என்று சொல்லும் போதே கண்ணை கட்டுகிறது அல்லவா?
ஏன்னா, கோவை-அவினாசி சாலையில் 10 கி.மீ. துாரத்துக்கு சின்னியம்பாளையம் வரை உயர் மட்ட மேம்பாலம் கட்டி வருகிறார்கள். மேம்பால பணிகள் 70 சதவீதத்துக்கும் அதிகமாக முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நிலைமை இப்படியிருக்க அதே சாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது சாத்தியமான்னு கோவையில் கேள்வி கேட்காத ஆளே இல்லை என்று சொல்லலாம்.
அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலத்துக்காக கட்டியுள்ள நிலையில் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலம் எங்கு உள்ளது? ஏற்கனவே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்துக்கு எவ்வளவு துாரத்தில் மெட்ரோ ரயிலுக்கான கான்கிரீட் துாண்கள் அமையும்? மெட்ரோ ரயில் நிலையங்கள் எங்கு அமைக்கப்படும்? இதற்காக தனியார் நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுமா? என பல கேள்விகள் கோவை மக்கள் மனதில் எழுகிறது.
ஆனால் அவையெல்லாம் சாத்தியம் என்று சொல்கிறார் ராக் அமைப்பின் இணை செயலாளர் சதீஷ்.#கோயம்புத்தூர் #Coimbatore #cbemetro #metrotrain #transport #avinashiroad #sakthiroad #travel #bridge #bus #speed

Комментарии

Информация по комментариям в разработке