நாமக்கல் மலைக்கோட்டை வரலாறு & உருவானவிதம்||Namakkal fort

Описание к видео நாமக்கல் மலைக்கோட்டை வரலாறு & உருவானவிதம்||Namakkal fort

நாமக்கல் மலைக்கோட்டை ஒரே கல்லால் ஆன மலையின் மேல் கட்டப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சேர்ந்த ராமச்சந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டது என்றும் மைசூர் அரசின் அதிகாரியான லட்சுமி நரசய்யாவால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடந்த போரில் திப்பு சுல்தான் போரிட இந்த கோட்டையை பயன்படுத்தினார் அந்த காரணத்தால் இந்த கோட்டை திப்பு சுல்தான் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது.இந்த மலைக்கு கீழே அடிவாரத்தில் கமலாலயக் குளம் ஒன்று உள்ளது. இந்த மலைக்கு இருபுறங்களிலும் மலையை குடைந்து ரங்கநாதர் கோயிலும் நரசிம்மர் கோவிலும் கட்டப்பட்டுள்ளது.இந்த மலைக்கு நாமகிரி சாலகிராமம் என்ற பெயர்களும் உண்டு அனுமன் இலங்கைக்கு சஞ்சீவி மலையை எடுத்து சென்றபோது கமலாலயக் குளத்தில் காலை வழிபாடு நடத்துவதற்கு இறங்கினார்.இமயமலையில் இருந்து எடுத்து வந்த சாலகிராமம் கல்லை வைத்து வழிபாடு நடத்தினார்.வழிபாடு முடிந்து கண்களைத் திறந்து பார்த்த பொழுது அந்தக் கல் மிகப்பெரியதாய் இருந்தது இந்த கல்லை இங்கேயே விட்டுவிட்டு செல்லுமாறு ஒரு தெய்வீகக் குரல் கேட்டது . அந்தப்படியே அனுமன் அந்த மலையை இங்கேயே விட்டு விட்டு சென்றார்.

Комментарии

Информация по комментариям в разработке