Ponnar Sankar|Part-16|Therukoothu|

Описание к видео Ponnar Sankar|Part-16|Therukoothu|

அண்ணமார் சாமி கதை (பொன்னர் – சங்கர்) - வீரப்பூர்
Ponnar Sankar
Part 1    • அண்ணமார் சாமி கதை பகுதி-1|பொன்னர் சங்...  
Part 2    • அண்ணமார் சாமி கதை பகுதி-2|பொன்னர் சங்...  
Part 3    • அண்ணமார் சாமி கதை பகுதி-3|பொன்னர் சங்...  
Part 4    • பகுதி-4|அண்ணமார் சாமி கதை |பொன்னர் சங...  
Part 5    • பகுதி-5|அண்ணமார் சாமி கதை |பொன்னர் சங...  
Part 6    • பகுதி-6|அண்ணமார் சாமி கதை |பொன்னர் சங...  
Part 7    • பகுதி-7|அண்ணமார் சாமி கதை|பொன்னர் சங்...  
Part 8    • Ponnar Sankar Part-8|Therukoothu|அண்ண...  
Part 9    • Ponnar Sankar Part-9|Therukoothu|  
Part 10    • Ponnar Sankar Part-10|Therukoothu|அண்...  
Part 11    • Ponnar Sankar Part-11|Therukoothu|அண்...  
Part 12    • Ponnar Sankar Part-12|Therukoothu|ann...  
Part 13    • Ponnar Sankar|Part-13|Therukoothu|  
Part 14    • Ponnar Sankar|Part-14|Therukoothu  
Part 15    • Ponnar Sankar|Part-15|Therukoothu|  
Part 16    • Ponnar Sankar|Part-16|Therukoothu|  
Part 17    • Ponnar Sankar|Part-17|Therukoothu  
Part 18    • Ponnar Sankar|Part18|Therukoothu  
Part 19    • Ponnar sankar|Part 19|Therukoothu  
Part 20    • Ponnar Sankar|part20|Therukoothu  
Part 21    • Ponnar Sankar|Part-21|Therukoothu  
Part 22    • Ponnar Sankar|Part-22|Therukoothu  
Part 23    • Видео  
கொங்கு நாடு என்பது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் கரையினை ஒட்டிய கரூர் – திருச்சி சாலையில் அமைந்துள்ள அமராவாதி ஆற்றினை உள்ளடக்கிய நாடாகும். இந்த கட்டுரையில் நாம் சொல்லும் மாந்தர்களின் தாய் மற்றும் தந்தையின் சபதத்திலிருந்து தொடங்கி தங்கையின் அழுகை வாயிலாக முடிகிறது.
பொன்னுடையான் என்ற குன்னுடையான் கவுண்டருக்கும், தாமரை கவுண்டச்சியாருக்கும் பிறந்தவர்களே பொன்னர். சங்கர் மற்றும் தங்கம், மூவரும் வரத்தால் பிறந்தவர்கள் என்பதோடு, வீரபாகு சாம்பானும் இவர்களுக்கு துணையாக இருந்துள்ளான். மேலும் ஐந்து வயது நிரம்பி விபரம் பெறும் வரை அண்ணன்மார் இருவரையம் காளி தேவியரே வளர்த்தாரெனவும் சுட்டப்படுகிறது. பாம்புக்கு பல்லில் விஷம், பங்காளிக்கு உடம்பெல்லாம் விஷம் என்பதுபோல் வேளாளர்கள் பங்காளிப் பகையை பரம்பரையாக கொண்டவர்கள் என்பர். இதனால் தாயார் தாமரை தான்பட்ட இன்னல்களையும் சபதங்களையும் நினைவுபடுத்தி பொன்னர் சங்கர் இருவரிடமும் கூற, அவர்கள் பங்காளிகளை பலிவாங்கி தாயை மகிழ்விக்கின்றனர். அத்துடன், பெற்றோரின் நிலபுலங்களை மீட்க சோழராஜனின் மேலை நாட்டை கைப்பற்றுவதாகவும் கதை கூறுகிறது. பொன்னரும் சங்கரும் போருக்கு செல்லும் வேளையிலேயே, தாயும் தந்தையும் இறந்து விடுகின்றனர். இவர்களது இறப்பிற்கு பின்னரேயே திருமணம் செய்வதுடன், தாயின் சபதத்துக்காக மனைவியரை சிறையிட்டதாகவும் கதைத் தொடர்கிறது. பொன்னரும் சங்கரும் சோழன் ஆதரவால் வளநாட்டுக்கு உரிமை பெற்ற காவலர்களாக இருக்கின்றனர். நங்காள் எனப்படும் தங்காள் கிளி கேட்க, தங்கைக்காக அவர்கள் அன்னக்கிளி கொண்டு வர வீரமலை காட்டுக்கு போவதை,"நாகமலை தோகை மலை நாலுபக்க வீரமலை வீரமலை நடுவினிலே.... எனத் தொடரும் பாடல்கள் புலப்படுத்துவதுடன், காட்டில் சங்கர் அறுபதடி வேங்கையை வெட்டுகிறார். இதனால் தலையூர் காளி கோபமுற்று கூத்தாளை நாட்டைத் தாக்கி குப்பாயியை சிறையெடுத்துப் போகிறாள். பொன்னரும் சங்கரும் குப்பாயியை மீட்க தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொன்னரும் சங்கரும் சாம்பானும் வேடுபடையோடு மோதி இறக்கின்றனர். அரண்மனையில் தனியாய் வசித்தத் தங்காள் அன்னியர்களை அழைக்க, அவர்கள் மறுத்து பட்டணம் போய் விடுகின்றனர். அரண்மனையில் தனியாக தங்காள் ஒப்பாரி வைத்து அழுகிறாள். உயிர் பிச்சை கேட்டு புலம்பும் அவள் படுகளம் போய் புலம்புகிறாள். பொன்னர் சங்கர் இறந்ததே படுகளம் எனப்படுகிறது. அதன் பின் தண்ணீர் எடுத்தெளித்து பிரம்பால் தட்டுமாறு கூற, தங்காள் அவ்வாறே செய்ய இறந்தவர்கள் உயிர்பெற்று அமரராகின்றனர். இதனால் தான் `கொங்குமலிந்தால் எங்குமலியும்' என்ற பழமொழி கொண்ட அந்த நாட்டின் முழுதும் பரவியுள்ள கதைப்பாடல் வரிகளில்,

" ஒக்கப் பிறக்கணுமா - அண்ணா
ஒரு முலைப் பால் உண்கணுமா
கூடப் பிறக்கணுமா? அண்ணா
கூட்டுப்பால் உண்கணுமா

என்ற சகோதரப் புலம்பல் தொடர்வதை காண்கிறோம். இதன் அடியொட்டிய அத்தனை விடயங்களும் இன்றும் மீரியபெத்தை படுகளத்தில் மறுவடிவமாக்கப்படுகிறது.

Комментарии

Информация по комментариям в разработке