தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் பாடல் - பராசக்தி -Desam Gnanam Kalvi Song -Parasakthi

Описание к видео தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் பாடல் - பராசக்தி -Desam Gnanam Kalvi Song -Parasakthi

உங்கள் நெஞ்சம் நிறைந்த திரைப்பாடல் வரிகள்

Whatsapp (வாட்ஸ் ஆப்) :
https://chat.whatsapp.com/JTjxASphqmp...

Facebook (ஃபேஸ்புக்) :
  / paattuputhagam  

Twitter (டிவிட்டர்) :
  / pattuputhagam  
***********************************************
படம் : பராசக்தி (1952)
பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி
குரல் : சி.எஸ்.ஜெயராமன்
இசை : ஆர்.சுதர்சனம்

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
காசுக்குப் பின்னாலே.

சாட்சியான பணம் கைவிட்டுப் போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி.
பைபையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்
மெய் மெய்யாய் போகுமடி.

நல்லவரானாலும் இல்லாதவரை
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே - குதம்பாய்
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

Комментарии

Информация по комментариям в разработке