T M SOUNDARARAJAN LEGEND & VOL 8274

Описание к видео T M SOUNDARARAJAN LEGEND & VOL 8274

தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்கள் புகழ் ஓங்குக!. இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் டி எம் எஸ் ஐயா அவர்கள் ஒரு பாடலை அருமையாக பாடி இருப்பார். அதன் பிறகும் இளையராஜா இசையில் டி எம் எஸ் அவர்கள் பாடிய அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அந்தப் பாடல்களை நீங்கள் இப்போது கேட்டாலும் டி எம் எஸ் ஐயா அவர்கள் எவ்வளவு இனிமையாக பாவத்தோடு (baavam) பாடி இருக்கிறார் என்பதை உணர்ந்து ரசிக்க முடியும். அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா அவர்கள் டி எம் எஸ் அவர்களை பாட வைக்காமல் தவிர்த்து வந்தார். இளையராஜா அவர்களின் மேடைக் கச்சேரிகளில் கூட மற்ற பாடகர்களின் பாடல்களை மட்டுமே பாட வைத்தார். இளையராஜா தான் இசையமைத்த டி எம் எஸ் அவர்களின் பாடல்களை எல்லா கச்சேரிகளிலும் தவிர்த்தே வந்துள்ளார். அவர் மட்டும் டி எம் எஸ் ஐயா அவர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்திருந்தால் நம் போன்ற ரசிகர்களுக்கு திகட்டாத இனிய விருந்தாக பல பாடல்கள் கிடைத்திருக்கும். இது நடக்காதது நமது தூரதிர்ஷ்டமே. சிங்கப்பூரைச் சேர்ந்த டி எம் எஸ் ஐயா அவர்களின் தீவிர ரசிகரான திரு திராவிடச் செல்வன் அவர்கள் இளையராஜாவின் இசையில் டி எம் எஸ் ஐயா அவர்கள் பாடிய பாடல்களை தொகுத்து இங்கே வழங்கியுள்ளார். 32 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் ஏதாவது பாடல் இருந்தால் ரசிகர்கள் தெரிவிக்கலாம். அனைத்து ரசிகர்களின் சார்பாக சிங்கப்பூர் திராவிடச் செல்வன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். தெய்வப் பாடகர் T M சௌந்தர்ராஜன் அவர்களின் புகழ் ஓங்குக!

Комментарии

Информация по комментариям в разработке