108 நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி |அஜித்தா வீரபாண்டியன்
அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று நமது குழுவின் திருமதி.அஜித்தா வீரபாண்டியன் அவர்களை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியமாகிறது
அதனால் இந்த பதிவு 👇
அவர்கள் பெற்ற பயிற்சிகள் 👇
தான் வந்த பாதைகளை எந்த உயரத்திற்கு சென்றாலும் மறக்காமல் உள்ளார். பணம் கொடுத்து கற்று கொண்டாலும் கற்று கொடுத்தவர்களை மறக்கவில்லை. கற்று கொடுப்பதையும் சேவையாக செய்கிறார்.
அவரின் நேர்கானலில் இருந்து எடுக்கபட்டவை
2003 ல் தனது இயற்கைவாழ்வியல் பயணம் ஆரம்பமாகியது...
இடம் சிவசைலம்
தன்னலமில்லா பயிற்சி கொடுத்தவர்கள் 👇
மு. ஆ. அப்பன் ஐயா
எ.வி.ஜி ரெட்டி அவர்கள்
இரத்தின சக்திவேல்
நலவாழ்வு
இராம. ஆழ்வாரம்மாள்
2015 முதல் இயற்கை விவசாயம்
தனது 2 ஏக்கர் மானவாரி நிலத்தில் 13 வகையான பயிர்கள் விதைத்தது, இயற்கை முறையில் பயிர் ஊக்கிகள் கொடுத்து, மிக சிறப்பான அறுவடை பசுமைவிகடனில் அட்டை படத்துடன் செய்தியாய் வெளிவந்தது ....
யோகாசன பயிற்சிகள்
திரு. வேதா
தொடு சிகிச்சை
Dr. பிரசாந்த்
தியானம்
பங்கஜ் ரவீந்தர்
திராடகம் கண் பயிற்சி
திரு. வேதா
மண் குளியல், வாழை இலை குளியல், இயற்கை உணவு, வாழ்வியல், விழிப்புணர்வு புஸ்தகங்கள், பயிற்சி பொருட்கள் அனைத்தையும் அறிமுகபடுத்தி வழிகாட்டியவர்....
திரு. செல்வராஜ் ஐயா
விருதுநகர்
தற்சார்பு பொருட்கள் தயாரிப்பு
செல்வராணி
தோல் பராமரிப்பு, கேசபராமரிப்பு
திருமதி. நான்சி
நம் குழுக்களில் உள்ளவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தேடலில் இணைந்தவர்கள், அந்த தேடலின் விடை இங்கே கிடைத்திருக்கலாம், கிடைத்துக்கொண்டிருக்கலாம், கட்டாயபடுத்தி ஒரு குழுவில் இருக்க சொல்லி அழைத்தால் நீண்ட நாள் தொடர்வது சாத்தியமில்லை, ....
மேலும் இதில் பயணம் செய்பவர்கள் தன்னலமில்லா பயிற்சியாளர்கள்,
இந்த குழுவின் நோக்கம், மனித ஆரோக்கியத்திற்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆரம்பித்தது.....
குழுவில் நீங்கள் பெறும் அனைத்து பயிற்சிகளும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரடி பயிற்சியாகவும் அடுத்து வரும் நாட்களில் கொடுக்கப்படும்.....
திருமதி. அஜித்தா விரபாண்டீயன் அவர்களுடைய இந்த 108 நாள் பயிற்சி ஒரு விழிப்புணர்வு பயிற்சியாக அமையும்
எங்கள் நோக்கம் அவரவர்கள் இருக்கும் ஊர்களில் தன்னலமற்ற பயிற்சியாளர்கள் உருவாக்கவேண்டும், உருவாகவேண்டும்....
அதனால் நிறைய ஊர் பயணங்கள் மேற்கொள்கிறோம்.
சுற்றியுள்ள அனைவரும் ஆரோக்கியம் பெற வேண்டும்...மிக எளிமையான முறையில் இதுவே எங்கள் நோக்கம்.....
Ajitha V பற்றி மேலும் அறிய
https://openhorizon.in/tamilnadu/yiel...
அனைவருக்கும் வணக்கம் 🙏
ஏன் இயற்கைவாழ்வியல் முறைகளை தெரிஞ்சிக்கனும்
ஏன் நமக்கு தெரிஞ்ச மருத்துவ முறைகளை மற்றவங்களுக்கு சொல்லனும்
எனதனுபவம்....👇
எங்க கிராமத்தில் , 5 ம் வகுப்பு படிக்கும் போது நாங்க 5 பேர் இணைபிரியா தோழிகள், இரவு தூங்க மட்டும்தான் அவங்கவங்க வீட்டுக்கு போவோம், மற்றபடி பள்ளிக்கூடம், குளியல், விளையாட்டு எல்லாமே சேர்ந்துதான், ....
அதில் ஒரு தோழி பள்ளிக்கூடத்தில் அழகிலும் முதல் இடம், படிப்பிலும் முதல் இடம், ஆசிரியர்களிடம் பெற்ற அன்பிலும் முதல் இடம்....
6 ம் வகுப்பிற்கு சூழ்நிலை காரணமாக சென்னை வந்துவிட்டேன்,
12 வருஷம் கடந்து திரும்ப கிராமத்திற்கு போகிறேன், தோழிகள் ஒவ்வொருவரும் ஒரு பக்கம் போயிட்டாங்க.....
அந்த அழகிய தோழிமட்டும் கிராமத்தில் இருந்தாங்க, என்னை பார்த்தும் பேசல, குழப்பமாக இருந்தது,
பக்கத்தில் விசாரித்ததில், குடும்பத்தில் நடந்த இழப்புகளில் நடந்த மன அழுத்தங்கள் மெளனமாக்கிவிட்டது,
அடுத்த ஒரு 6 மாதத்தில் அதிகமான பேச்சு, பயமுறுத்தும் நடவடிக்கைகள், ஊரே பயந்தது, அதில் நானும் ஒருத்தி,
அவங்கள பார்த்து பயந்தேனே தவிர உதவி செய்ய தோனல....
இப்ப அவங்க இல்ல
இப்ப எனக்கு தெரிஞ்ச இயற்கை வாழ்வியல் செய்திகள், இந்த சுத்தி முறைகள், இயற்கை வாழ்வியல் மருத்துவர்கள் அந்நைக்கு தெரிஞ்சிருந்தா அவங்கள ஏதாவது ஒரு வழியில காப்பாத்தி இருக்கலாம்,
குறைந்தபட்சம் அவங்க கூட பேசியிருந்தாகூட அவங்க மன பாரம் இறங்கியிருக்கும்.....
நிறைய நண்பர்கள் கேட்கறாங்க, கட்டணமில்லா பயிற்சி ஏன் கொடுக்கறீங்க, நாம சொல்றதுக்கு மதிப்பு இருக்காது, உங்ககிட்ட வசதி நிறைய இருக்கு அதான் இப்படி செய்றீங்க னு,
நானும் நடுத்தர குடும்பம்தான்...பணம் வரும் போகும், நெருங்கியவர்களின் உயிர்கள் போனால் திரும்ப வராது....
நிறைய நல்ல விஷயங்கள தேடிப்போய் கத்துக்கோங்க, நம்ம சுத்தி இருக்கறவங்க ளுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம சொல்லுங்க,
இந்த இயற்கை வாழ்வியல் முறைகள் எந்த பக்கவிளைவும் இல்லாதது, அதனால் தைரியமா எல்லாருக்கும் சொல்லித்தரலாம், ஆனா
கற்றுக்கொள்ளும்போது நாம செய்துபார்த்து அப்பறம் சொல்லித்தருவது, அனுபவ அறிவு கொடுக்கும், இந்த செயல் உங்களை சார்ந்தவங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்....
அடுத்தடுத்து பெரிய நோய்கள் வருவதாக சொல்றாங்க.....
ஆனா இந்த வாழ்வியலை கடைபிடித்து செயல்படுபவர்கள் பயப்படாம தைரியமா இருக்கலாம்.....
பல் விலக்கறது, குளிப்பது, சாப்பிடறது தினமும் எப்படி ஒரு வழக்கமானதோ அதே மாதிரிதான் இந்த வாழ்வியலும் ஆகனும்....
இந்த 108 நாள் பயிற்சிகள்
உடல் நலத்திற்க்கும்
மனநலத்திற்கும்
குடும்ப நலத்திற்கு
சமுதாய நலத்திற்க்கானது.....
எல்லோரும் 100 % பயிற்ச்சி செய்ங்க, 200% ஆரோக்கியமா இருக்கலாம் 🤝👍💐
உங்கள்
அஜித்தா வீரபாண்டியன்
Информация по комментариям в разработке