பொன்னமராவதியில் பொன்னமராவதி லயன்ஸ் சங்கம், லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் மதர் தெரசா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இயற்கை மற்றும் யோகா அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், இலுப்பூர் மதர் தெரசா யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொன்னமராவதி லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச இயற்கை மற்றும் யோகா அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பொன்னமராவதி லயன்ஸ் சங்கத் தலைவர் வி.என்.ஆர் நாகராஜன் தலைமை வகித்தார். லயன்ஸ் அறக்கட்டளையின் செயலாளர் பழனியப்பன், லயன்ச் சங்க இயக்குனரும் கல்லூரியின் பேராசிரியருமான பூங்குன்றன், ஊராட்சி மன்ற தலைவர் கீதா சோலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார், சிவலதா உதயகுமார் மற்றும் தொழிலதிபர் பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முகாமில் பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை, உணவு முறைகள், யோகாசனங்கள், அக்குபஞ்சர் மற்றும் தோள்பட்டை வலி, கழுத்து வலி, சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள், கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் 205 நபர்களுக்கு கல்லூரியின் மருத்துவர்கள், முதல்வர் பிளேஸ்டூவர்ட், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முத்துப்பாண்டியன், விஜய்ஆனந்த், சிவசரஸ்வதி, பவித்ரா, கௌசல்யா, ராதா, கவிதா, பெனாசீர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி டீ, கொய்யா இலை டீ, மூலிகை சூப், முளைகட்டிய பயிறு வகைகள், கபசுரக் குடிநீர் பாக்கெட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் அரசமலை அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், திருக்களம்பூர் ராஜமாணிக்கம், சங்கத்தின் நிர்வாகிகள் ராமஜெயம், மணிகண்டன், சண்முகம், தண்டபாணி, தங்கப்பன், யுவராஜ், அண்ணாமலை, கருப்பையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முகாமின் முடிவில் சங்கத்தின் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
Информация по комментариям в разработке