ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals

Описание к видео ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் - Swarna Akarshana Bhairavar Ashatakam | Bairava Song | Vijay Musicals

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்

தனந்தரும் வயிரவன் - தமிழ் பக்தி பாடல்
பாடியவர் : பிரபாகர்
இயற்றியவர் : ஸ்ரீதுர்கா சித்தர்
இசை : சிவபுராணம் D V ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
கடவுள் : பைரவர்
தயாரிப்பு :விஜய் மியூஸிக்கல்ஸ்

Dhanam Tharum Vayiravan With Lyrics = Tamil Devotional Songs
God : Kala Bhairavar
Singer : Prabhakar
Lyrics : Sri Durgai Siddhar
Music : Sivapuranam DV Ramani
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

#DhanamTharumBairavarSong#DevotionalSongTamil

பாடல்வரிகள் = LYRICS :

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா . . .

சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்

வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்

காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்

பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்

Комментарии

Информация по комментариям в разработке