Paytm Issue: “Problem ஆகும்னு மொதல்ல இருந்தே சொல்றேன்” - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Описание к видео Paytm Issue: “Problem ஆகும்னு மொதல்ல இருந்தே சொல்றேன்” - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Anand Srinivasan Explains about Paytm Issue: டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் வங்கிக்கு ஏன் இந்த திடீர் தடை? அதனால் வாடிக்கையாளர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Reporter - Muralidharan Kasi Viswanathan
Shoot and Edit - Jerin Samuel

#PaytmCash #Paytm #AnandSrinivasan
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке