The Struggles, Silences, and Solidarities of Women’s Lives | பெண்களின் போராட்டங்கள் மற்றும் ஒற்றுமைகள்
https://bangaloreinternationalcentre....
At its heart, The Dark Hours of the Night is a story about girlhood under constraint, about how adolescence, desire, and freedom are shaped and stifled within the walls of a conservative household.
Rabia’s journey, woven together with the lives of her friends and cousins, illuminates the subtle negotiations, unspoken rebellions, and fragile solidarities that mark women’s coming-of-age in a patriarchal world. The novel opens a conversation about the everyday intimacies of restriction and resistance: the ache of thwarted desire, the bonds of friendship, the weight of silence, and the difficult balance between compromise and courage. It asks what it means to grow up when the future has already been decided, and whether education, love, or even small acts of defiance can shift those boundaries.
In this session, Subodh Sankar and Salma will reflect on these resonant themes, of gender, family, power, and the search for selfhood, that lie at the centre of The Dark Hours of the Night and across Salma’s larger body of work.
இரண்டாம் ஜாமங்களின் கதை என்பது கட்டுப்பாடுகளின் நடுவே வளரும் பெண் சிறுவயதின் கதை. இளமையின் ஆசைகள், சுதந்திரத்தின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள், ஒரு மரபுவழி குடும்பத்தின் சுவர்களுக்குள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.
ராபியாவின் வாழ்க்கைப் பயணம், அவளது தோழிகள் மற்றும் சொந்தங்கள் இணைந்து, பெண்களின் வளர்ச்சிப் பாதையில் அமைதியான எதிர்ப்புகள், நுட்பமான சமரசங்கள், சொல்லப்படாத போராட்டங்கள் மற்றும் உறவுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நாவல் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்ப்புகளைப் பற்றி உரையாடலைத் தொடங்குகிறது: நிறைவேறாத ஆசைகள், நட்பு பந்தங்கள், மௌனத்தின் சுமை, சமரசம் மற்றும் துணிச்சலின் இடைநிலைகள். எதிர்காலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் சூழலில் வளர்வது என்றால் என்ன, கல்வி, அன்பு அல்லது சிறிய எதிர்ப்புகள் கூட அந்த எல்லைகளை மாற்ற முடியுமா என்பதையும் கேட்கிறது.
இந்த உரையாடலில், சுபோத் சங்கருடன் சல்மா, இரண்டாம் ஜாமங்களின் கதை மற்றும் தனது விரிவான படைப்புகளின் மையத்தில் இருக்கும் பாலினம், குடும்பம், அதிகாரம் மற்றும் தனித்தன்மை தேடல் போன்ற கருக்களை ஆராயவுள்ளனர்.
Информация по комментариям в разработке