திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோசிஸ் விவகாரத்தில் கோர்ட் அதிரடி | Tirunelveli CSI diocese High court order

Описание к видео திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோசிஸ் விவகாரத்தில் கோர்ட் அதிரடி | Tirunelveli CSI diocese High court order

திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோசிஸ் விவகாரத்தில் கோர்ட் அதிரடி | Tirunelveli CSI diocese High court order


திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பிஷப் ஒருதலைபட்சமாக எந்த முடிவும் எடுக்க தடை விதிக்கக்கோரி மனோகர் தங்கராஜ் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டலத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு ஹசீனா அல்லது ஹேமா ஆசிரியர்களாக நியமிக்கப்படுவரா என்ற கேள்வி எழுகிறது.

திருநெல்வேலி திருச்சபை திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களின் சபை. இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு. திருநெல்வேலி திருமண்டல சொந்த விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது.

திருமண்டலம் துவக்கப் பள்ளி முதல் கல்லுாரி வரை பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளது. அவை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களின் சம்பள செலவுகளை, அரசிடம் இருந்து மானியமாக பெறுகின்றனர். ஆண்டு தோறும் 600 கோடியை அரசு கொடுக்கிறது.

மாநில அரசின் நிதி உதவி பெறுவதற்கான உரிமையுடன், சிறந்த, திறமையான ஆசிரியர்களை நியமிக்கும் கடமையும் திருமண்டலத்துக்கு உண்டு.

திருமண்டல பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது கொள்கை எனில், அது நிச்சயமாக நல்ல நிர்வாகத்திற்கு உகந்ததாக இருக்காது.

சந்தேகத்திற்கு இடமின்றி, சிறுபான்மை நிறுவன நிர்வாகம் பணி நியமனம் செய்ய வேண்டும். ஜாதி, மத பின்னணியை பொருட்படுத்தாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலியிடங்களை முறையாக அறிவிக்க வேண்டும்.

ஆட்சேர்ப்பு முறையை முன்னரே தீர்மானித்துவிட்டால், இவை அனைத்தும் வீணாகிவிடும். அதனால் தான் வெளிப்படைத்தன்மை வேண்டும். தேர்விற்கான விதிமுறைகளை நிர்வாகங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நேர்காணல் நடவடிக்கைகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டோர் எவ்வாறு தேர்வு நடந்தது என்பதை அறிய வழிவகை செய்ய வேண்டும்.

திருமண்டல பதிவு மூப்பு பட்டியலிலிருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஹசீனா, ஹேமாக்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

நியமனத்தின் முழு நடைமுறையும் அரசியலமைப்பிற்கு முரணானது; பாரபட்சமானது. ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறுவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

அரசின் கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என மதச்சார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகள் சொல்கின்றன.

உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான தருணம் வந்துவிட்டது. மனுதாரர் கோரும் நிவாரணம் அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.#TirunelveliCSIdiocese #Highcourtorder

Комментарии

Информация по комментариям в разработке