கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட புண்ணிய தலம் | Avinasi Jothilingam | Velli malai Naathar

Описание к видео கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட புண்ணிய தலம் | Avinasi Jothilingam | Velli malai Naathar

#avinasijothilingam #sivan #lordshiva #bakthiinfinity #astrology #சுகமே #சூழ்க

கங்கை வழிபட்டு தன் பாவங்களைப் போக்கிக்கொண்ட புண்ணிய தலம் | Avinasi Jothilingam

____________________________________________
____________________________________________

வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர்

நவக்கிரகங்கள் சிவனாரை வழிபட்டு மண்டலாதிபதிகளாக விளங்கும் பேறு பெற்ற தலம் ,

லட்சுமி கடாக்ஷம் கிடைக்க வழிபடவேண்டிய சிவத்தலம்..
அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் – திருவாரூர்
தொலைபேசி எண் : 04369 237 454

இருப்பிடம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருநெல்லிக்கா சாலையில் சென்று , திருநெல்லிக்காவை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம். திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ( வழி : திருநெல்லிக்கா ) சாலையில் 18 கிமீ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவை அடைந்து , அங்கிருந்து 2 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.

மூலவர் : வெள்ளிமலைநாதர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
தல விருட்சம் : தென்னை
தீர்த்தம் : சிவகங்கை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருத்தேங்கூர், திருத்தெங்கூர்
ஊர் : திருத்தங்கூர்
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் நவக்கிரகமாக லிங்கம் இருப்பது சிறப்பு.
பிரளய காலத்தில் தெளிந்த நீர் தேங்கி இருந்த தலம் என்பதாலும் , தென்னை மரங்கள் நிறைந்த தலம் என்பதாலும் தேங்கூர் என்று அழைக்கப்படுவதாக இருவேறு வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
திருமகள் வழிபட்ட சிவலிங்க மூர்த்தம் மகாலட்சுமி சந்நிதி எதிரில் திருக்காட்சி அளிக்கிறது

அகலிகை சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி சிவனாரை வழிபட்டு தன் பாவம் நீங்கி நலம் பெற்ற தலம்.
மூலவர் சற்று உயர்ந்த பாணத்துடன் மேற்கு நோக்கியும் , அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்.

நடைதிறப்பு :
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை:
இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிகளுக்கு தங்களால் முடிந்த பங்கினை அளித்து வேண்டிக் கொள்ளலாம்

தலபெருமை:

இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள்.
வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார்.

____________________________________________
____________________________________________

For Business :
Email : [email protected]

Комментарии

Информация по комментариям в разработке