பாரதியை கொன்றது யார்? | Thenpulathar | Who Killed Bharathi? | மறைக்கப்பட்ட வரலாறு | #5

Описание к видео பாரதியை கொன்றது யார்? | Thenpulathar | Who Killed Bharathi? | மறைக்கப்பட்ட வரலாறு | #5

பாரதி பற்றியும் அவனது வாழ்க்கை பற்றியும் நம்மிடையே பலவகையான தவறான புரிதல்கள் உள்ளது.

பாரதி இறப்பு என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

பாரதி எப்படி இறந்தான் என்று வினாவிற்கு ஒரு குழந்தை கூட திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் யானை மிதித்து இறந்தான் என்று ஒரு நொடி பொழுதில் விடையளிக்கும்.

யானை மிதித்து ஒரு வருடம் வரை , அவன் நன்றாக வாழ்தான் என்பதும், வயிற்றுபோக்கு காரணமாகவே வெறும் 39 அகவையில் 1921 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் நாள் நள்ளிரவு மரணத்தை முத்தமிட்டான் என்பது அவனது இறப்பு சான்றிதழ் சொல்லும் வரலாறு.

அவன் இறுதி ஊர்வலத்தில் ஏன் பலரும் கலந்து கொள்ளவில்லை அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று சிந்திக்காமலேயே கண்ணீர் சிந்துகிறது தமிழ் சமூகம்.

திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வாழ்ந்தவன் பாரதி.

அது அந்தணர்கள் குடியிருக்கும் வீடு எனவே நண்பர்கள் உறவினர்கள் வரும் வரை அதிக நேரம் காத்திருக்காமல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.

பெற்ற மகள் குளிப்பாட்டவில்லை சொந்தங்கள் கட்டி அழவில்லை , ஏன் அம்மாவும் நானும் வெளியில் கூட வரவில்லை என்று எழுதுகிறார் சகுந்தலா பாரதி.

அவன் காணிநிலம் கேட்டு மாதா பராசக்திக்கு மனு செய்தான். அவளோ அவன் கல்லறைக்கு கூட காணிநிலம் தரவில்லை .


வாழும்போது மதிக்கப்படாத கவிஞன் இறந்தபின் துதிக்கப்படுகிறான்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்பதை சொல்லாமல் சொன்ன யுகபுருஷன் எங்கள் பாரதி.

சரித்திர தேர்ச்சி கொள்ள தென்புலத்தார் Channel க்கு Subscribe செய்யுங்கள்.


Share , Like , Comment தென்புலத்தார் Channel

Facebook
  / thenpulathar  

Blogger In
https://www.Thenpulathar.blogspot.com

Twiter Page In
https://www.twiter.com/Thenpulathar

Комментарии

Информация по комментариям в разработке