கண்ணாத்தாள் கோவில் நாட்டரசன் கோட்டை Kannathal Temple

Описание к видео கண்ணாத்தாள் கோவில் நாட்டரசன் கோட்டை Kannathal Temple

நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.
கம்பன் சமாதி நிலை மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கம்பன் சமாதிக்கு சிறப்புகள் செய்தால் சிறப்பாக இருக்கும்.
பரம்பரை பரம்பரையாக பாரசைவர்களாள் அம்பாளுக்கு பூஜா கைங்கர்யம் செய்யப்படுகிறது.
கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள். #சிவகங்கை #காரைக்குடி #கோவில்
#templesofindia
#tamil #ancientindia #history #templesoftamilnadu #sculpture

Комментарии

Информация по комментариям в разработке