திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்

Описание к видео திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் | பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம் | மூகாம்பிகை தலம்

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
மகாலிங்கமூர்த்தி (சிவன் தாமே லிங்கம் செய்து அந்த லிங்கத்தை சிவன் பூஜை செய்த தலம்.
பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி தலம்
திருவிடைமருதூர்(93/274)

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரிதென்கரைத்தலங்களில் இது 30வது தலம்.

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம் உள்ள தலம்.

திருவிடைமருதூர் தெரு அழகு என்பது பழமொழி

மூலவர்: மகாலிங்கேஸ்வரர்

அம்பாள் / தாயார் : பெருமுலையாள்

தலவிருட்சம் : மருதமரம்

தீர்த்தம் : காருண்யமிருதம் மற்றும் காவேரி

ஊர் : திருவிடைமருதூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

ஆலய அமைப்பு முறைப்படி திருவலஞ்சுழி-விநாயகர் , சுவாமிமலை-முருகன் ,
சேய்ஞலூர்-சண்டேசுரர், சூரியனார்கோயில்-சூரியன் முதலான நவகோள்கள்,
சிதம்பரம்-நடராஜர் ,
சீர்காழி- பைரவர்,
திருவாவடுதுறை - திருநந்தி
ஆகிய பரிவாரத் தலங்களுடன்அவற்றின் நடுவில் மூல மூர்த்தியாக இக்கோயிலில் நடுநாயகமாக ஸ்ரீ மகாலிங்கப் பெருமான் விளங்குகின்றார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

தல வரலாறு

உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார்.

உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி அளித்தார். முனிவர்கள் அனைவரும் தேவியிடம் சிவபெருமானையும் காண வேண்டும் எனக்கூறினர். முனிவர்களுக்காக இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும்முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.

காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு கொண்டு அம்பாள் " இறைவா, பிரம்மன்முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்றுவினவ

"உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே".

நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார்.

முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.


ஸ்ரீமூகாம்பிகை

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே கொல்லூரிலும்,திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள்சன்னதிக்குத் தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பிராத்தனை

இந்த மூகாம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர்.

இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,பைத்தியம் முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர்.

இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.

பட்டினத்தார்

பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது.பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒருநாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும்திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒரு நாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை, இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார்.

இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க, இந்த திருவோடும்,நாயும் தம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி பத்திரகிரியார் ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.

பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம்,

காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன.

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய லிங்கம் உள்ள தலம்.

இந்தியாவிலேயே அன்னை மூகாம்பிகை க்கு தனி கோயில் கொல்லூரிலும் இத்தலத்தில் மட்டுமே உள்ளது.

திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர் ஆகும்.

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் திருவிடைமருதூர் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவிடைமருதூரில் நின்று செல்லும்.

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

கோயில் Google map link

https://maps.app.goo.gl/ATSWrfV759aQb...

if you want to support us via UPI id

9655896987@ybl

Join this channel to get access to perks:

   / @mathina  

- தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке