ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் | வீரத்தமிழர்கள்-5 | History of Nedunchezhiyan|SangathamizhanTV

Описание к видео ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் | வீரத்தமிழர்கள்-5 | History of Nedunchezhiyan|SangathamizhanTV

ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் | வீரத்தமிழர்கள்-5 | History of Nedunchezhiyan | SangathamizhanTV

கரிகால சோழனின் உண்மை வரலாறு:    • கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தம...  

கல்லணையை கட்டியது கரிகாலனா?:    • கல்லணையை கட்டியது கரிகாலனா? | வீரத்தம...  

இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்:    • இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரல...  

தமிழரை இகழ்ந்தவரை பழிதீர்த்த சேரன் செங்குட்டுவன்:    • தமிழரை இகழ்ந்தவரை பழிதீர்த்த சேரன் | ...  

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்:    • ஆரியர்களை அடித்து விரட்டிய பாண்டியன் ...  

வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.

இவ் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வீரத்தில் மேம்பட்டு விளங்கினான். அவனைக் கண்டாலே பகைவர் அஞ்சி நடுங்கினர்.
அவன் மனைவி கோப்பெருந்தேவி என்னும் பெயருடையவள். அவள் நற்குண நற்செயல்கள் உடையவளாய், கணவன் கருத்துப்படி நடக்கும் தன்மையுடையவளாய், விளங்கினாய். சமையத்தில் அமைச்சனைப் போல ஆலோசனைக் கூறும் அரிய பண்பு அவளுடன் அமைந்திருந்தது.
மனத்திற் கிசைந்த மனைவியைப் பெற்ற நெடுஞ்செழியன், இல்லறத்தையும் அரசாட்சியையும் இனிதே நடத்தி வந்தான். நெடுஞ்செழியனையும் கோப்பெருந்தேவியையும் மகிழ்விக்க அவ்விருவருக்கும் மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு வெற்றிவேற் செழியன் என்று பெயரிட்டு, நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். வெற்றிவேற் செழியனும் தன் பெயருக்கு ஏற்றவாறு, எல்லா வகையிலும் வெற்றியுடன் விளங்கினான். தன் தந்தைக்குப் பல வழிகளிலும் துணை புரிந்தான்.
வடநாட்டிலுருந்து ஆரியனொருவன் பெரும் படையுடன் தமிழ் நாட்டைத் தாக்குவதற்காக வந்து கொண்டிருந்தான். நெடுஞ்செழியனின் ஒற்றர்கள் வந்து, ஆரியப் படையின் வருகையை அறிவித்தனர்.
செய்தியைக் கேட்டதும் நெடுஞ்செழியனின் கண்கள் சினத்தால் சிவந்தன. தோள்கள் விம்மின. தமிழரது ஆண்மையை அறியாது எதிர்த்து வரும் படையை எதிர்த்தழிக்க வீறு கொண்டான். மற்றைய சேர சோழர்களின் துணையையும் அவன் நாடவில்லை. தான் ஒருவனே எதிர் நின்று போரிட்டு ஆரியப் படையை வெல்வது என்று முடிவு செய்தான்.
ஆரியப் படை பாண்டிய நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னே, வரும் வழியிலேயே சென்று தாக்கினான். ஆரியப் படையை வெல்வதற்குப் பெரும்படை தேவையில்லையென்று சிறுபடையுடனே சென்றிருந்தான்.
பாண்டியப் படை சிறிதானாலும் வலிமையில் பெரியது. இரு படைக்கும் போர் மூண்டது. ஆரியப்படை அளவில் பெரிதாக இருந்தாலும், புலிக்கு முன் நிற்க மாட்டாமல் மருண்டோடும் மான் கூட்டம்போல, பாண்டியப் படை முன் நிற்கமாட்டாமல் நாலா திசையிலும் சிதறி ஓடியது. நெடுஞ்செழியன் வெற்றி பெற்று வாகை மாலை சூடினான்.
அவனது வீரத்தை மக்களும் புலவரும் போற்றினர். அவ் வெற்றிக்குப் பின், அவனை எல்லோரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கத் தலைப்பட்டனர். அந்தப் பெயரே அவனுக்கு நிலைத்தது.

உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
1. சங்ககால பாண்டியர்கள்: http://tamildigitallibrary.in/admin/a...

2. தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்: http://www.subaonline.net/thfebooks/T...

3. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு பதிப்பகம், 2016, ISBN - 97893 84646 639


4. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், தமிழினி பதிப்பகம், 2020,  ISBN - 81876 4291 -2, 



#SangathamizhanTV #Karikalan #KarikalaCholan #KarikalanHistory #Veerathamilar #TamilHistory #TamilPride #HistoryOfKarikalaCholan #கரிகாலசோழன் #பெருஞ்சேரலாதன் #வடக்கிருத்தல் #வெண்ணிப்பறந்தலை #இமயப்படையெடுப்பு #புலிச்சின்னம் #கரிகால்பெருவளத்தான் #சோழநாடு #மூவேந்தர் #சோழநாடுசோறுடைத்தநாடு




***************************************************************************************
Join this channel to get access to perks:
   / @sangathamizhantv  

For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv  

Email ID: [email protected]

Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV

Follow me on Facebook Page:   / changatamizhan  

Комментарии

Информация по комментариям в разработке