Jaathithaan . ஜாதித்தான்

Описание к видео Jaathithaan . ஜாதித்தான்

LISTEN:

Spotify: https://tinyurl.com/JaathithaanSpotify
Apple Music: https://tinyurl.com/JaathithaanAppleM...

FOLLOW:

Instagram: https://tinyurl.com/kabervasukiinstagram
Spotify: https://tinyurl.com/kabervasukispotify
Apple Music: https://tinyurl.com/kabervasukiapplem...
Merch Store: https://kaber-vasuki.stores.instamojo...

--

LYRICS:

உன் ஜாதித்தான் உன் வரலாறு

அங்கதான் நிக்குது தகராறு 

ஏன்னா யாருக்கும் வரலாறு தெரியாது 

வரலாறில் சுத்த உண்மைகள் கிடையாது 

 

உன் முப்பாட்டன்தான் பெரும் புடுங்கி 

நீ வெறும் வெட்டி தொடைநடுங்கி 

அவனும் கத்து தந்த பல நூறு வித்த 

நீ வெறும் சில்லறையை மட்டும் சேக்கே வித்த 

 

ஆத்திரம் புளிச்சபின்னே 

ஆராய்ந்து பாக்கபோனேன் 

சுயநலத்தை ஒதுக்கிவெச்சு 

நிதர்சனத்துல யூகிச்சேன் 

 

ஆறு ஏழு நியாய மனிதர் 

நிஜமாவே ஒத்திகை பாத்து 

என் யூகம் சத்திய கதிரின் 

நிழலுன்னு ஒத்துக்கிட்டு 

 

பரிசோதனை பண்ணித்தானே 

என் யூகம் உண்மையாச்சு 

உன் வாதம் உத்து கேட்ட 

அடுக்கடுக்கா புரளிப்பேச்சு 

 

நான் புழு-உணவாகி 

கடந்து போனபின்னும் 

விட்டு சென்ற உண்மையெல்லாம் 

தேடும் torch ஒளியில் மின்னும்   

 

ஒரு வேலை என் காலத்தில் 

ஊருக்கெல்லாம் புத்தி முளைச்சு 

ஆத்திரம் அடக்கி வெச்சு 

ஒரு மனமாய் உண்மை தேடினால் 

என் காலத்தின் உண்மைகள் 

என் மையில் எழுதி இருக்கும் 

எட்டிய செவியெங்கும் 

உள்-ஆராச்சி துவங்கி இருக்கும்   

 

ஒரு வேளை நாளை நமக்கு 

இந்த கேள்விக்கும் பதில் கிடைக்கும் 

 

ரௌத்திரம் ஓங்கியாச்சு 

கலாய்ச்சு சிரிச்சாச்சு 

கோவமா பொங்கியாச்சு 

யோசிக்க பழகியாச்சா 

 

இருளில் வாழ்கிறோம் என்று 

தலைவனை தேடி சென்று 

மூணு அடி முன்னே பார்க்க 

எவனுமே இல்லை என்று 

 

ஆங்காரம் ஆறிப்போக 

சமத்துவம் மறந்து போக 

சுற்றி உள்ள மனிதர் எல்லாம் 

துக்கத்தில் சூழ்ந்து போக 

 

எதிர்காலத்தின் சரத்திரி 

வரலாறின் தீப்பொறி 

இடையே ஒரு ஓட்டை வாளியில்  

நீதி-நதி நீரை கொண்டு நாமும் 

 

பரம்பரை பெருமையை 

mike-அ போட்டு கொண்டாடுறோம் 

சேது வந்த பவதெல்லாம் 

செம்மையை பந்தாடுறோம் 

 

சொகுசுல வளர்ந்த நாம 

சலுகைகள் வேண்டாங்குறோம் 

கண்ணக்கட்டி காதப்பொத்தி 

சமுதாயம் சமம்ங்கறோம் 

 

 

 

நம்மோட சலுகைகளோ

அமைப்பில் ஒளிந்திருக்க 

கவனம் தப்பிய சுகம் 

இங்கு நம்மை சுமந்திருக்க 

 

சொத்தோட பிறந்த-உனக்கும் 

பாவமாதான் பாக்கத்தோணும் 

பாட்டன் விட்டு போனதெல்லாம் 

உன் உழைப்புனு சொல்ல தோணும் 

 

ஆட்டத்தின் விதிகள் 

நமக்கு வளையும் 

நம் ஆற்றலின் விளைவில்லை

நமக்கே தெரியும் 

 

கையில் கட்டும் கயிறின் வண்ணம் 

கைவண்ணம் காட்டாது 

தோளில் தொங்கும் நூலினாலே உன் 

தகுதி கூடாது 

 

இயற்கை உன் கட்டுக்கதைக்கு 

தலையை ஆட்டது 

அதன் அலர்தலின் வழியே 

வீழ்ந்த வீம்பு பல நூறு 

 

உன் ஜாதித்தான் உன் தகராறு 

இங்க வந்து நிக்குது வரலாறு 

உன் முப்பாட்டன் புகழின் நிழலில் நிக்குறே 

உன் கதை மட்டும் தான் உண்மைன்னு சாதிக்கிறே

--

CREDITS:

Lyrics: Kaber Vasuki

--

CONTACT:

Email: [email protected]

Комментарии

Информация по комментариям в разработке