7) பெண் குழந்தைகள் இறைவனின் அருட்கொடை!
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு!
மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடாமல் ஒழுக்கமான முறையில் வாழ வேண்டும் என்றால் அது ஒவ்வொரு பெற்றோரின்
கையில்தான் உள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை பேணிப் பாதுகாக்கக் கடமைட்டுள்ளோம்.
குறிப்பாக இன்றைய நவீன காலத்தில் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கை உணர்வோடும் தங்களின் பிள்ளைகளை பேணிப் பாதுகாக்கக் கடமைட்டுள்ளோம்.
முன்னொரு காலம் இருந்தது. பெண்கள் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், வெட்க உணர்வோடும் வாழ்ந்து வந்த காலம் அது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில நல்ல பெண்களைத் தவிர, பெரும்பாலான பெண்கள் பெருமைக்காகவும், பகட்டுக்காகவும், ஆபாச உணர்வுகளை தூண்டுவதற்காகவும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றார்கள்.
பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் பாக்கியம் பெற்றவர்கள்.
பெண் குழந்தைகள் இறைவனின் அருட்கொடை, பரக்கத், ரஹ்மத், நற்செய்தி. தங்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை, கஷ்டங்களை சகித்துக் கொண்டு ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக நம்முடைய பிள்ளைகள் வளர்க்கப்பட்டால் நாம் அடைகின்ற நன்மைகள் ஏராளம்! ஏராளம்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்’’ என்றார்கள்.
(ஹதீஸ் சுருக்கம் ஆதாரம்: முஸ்லிம் 5125)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்‘’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்-5127)
பெண்குழந்தைகள் மூலமாக பல்வேறு சோதனைகள், கஷ்டங்கள், சிரமங்கள் ஏற்பட்டாலும், அந்தச் சோதனைகளை யெல்லாம் சகித்துக் கொண்டு மார்க்க அடிப்படையில், ஒழுக்கத்தோடு நம்முடைய பிள்ளைகளை வளர்த்தெடுத்தால் அந்தக் குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோரை நரகத்திலிருந்து காப்பாற்றும் திரையாக இருக்கும்.
இன்றைய காலத்தில் பெண்குழந்தைகள் நரக நெருப்பில் விழுகின்ற காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள்.
பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், ஆண் – பெண் இருவரும் சேர்ந்து படிக்கின்ற கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் ஒரு சிலர் சீரழிந்து சின்னா பின்னமாகி தங்கள் வாழ்க்கையைக் குழிதோண்டி புதைப்பதைப் பார்க்கின்றோம்.
பெற்றோர்களின் அலட்சியத்தின் காரணத்தினால், நம்முடைய பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் என்று நம்பி கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் காரணத்தினால் இவர்கள் தாங்களும் கெட்டு, பெற்றோருக்கும் அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விடுகின்றார்கள்.
எல்லாக் குழந்தைகளும் நல்லவர்களாகத்தான் வாழ்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.
ஆனால், காலச்சூழல் அவர்களைக் கெட்டவர்களாக மாற்றி விடுகின்றது.
இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை கவனத்துடனும், கூரிய பார்வையுடனும் கவனித்து வந்தால் அந்நிய ஆண்களோடு தொடர்பு வைப்பது, காதலிப்பது, செல்ஃபோன்களில் ஆபாசப் பேச்சுக்களைப் பேசுவது, வீட்டை விட்டு ஓடிப் போவது போன்ற பல்வேறு கேடுகெட்ட காரியங்களுக்கு மரணஅடி கொடுத்து விடலாம்.
பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகளை சீரழிவைத் தடுத்து நிறுத்துவது உங்களுடைய கரங்களிலேதான் இருக்கின்றது.
உங்களுடைய பிள்ளைகளுக்கு மார்க்க விஷயங்களை அதிகம் கற்றுக் கொடுத்து அவர்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன்: 66:6)
அவர்களுக்கு ஷைத்தான் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:120)
உங்கள் பிள்ளைகள் ஷைத்தானின் வலையில் விழுந்து விடாமல் பாதுகாப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
எனவே சீழிவை நோக்கிய வாழ்விலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
“இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய பணி கல்வியிலும், ஒழுக்கத்திலும், இஸ்லாத்தின் போதனையிலும் வலிமை பெறுவதே.”
“முஸ்லிம் இளைஞர்கள் குர்ஆனை வழிகாட்டியாகவும், நபி ﷺ அவர்களின் சுன்னாவை வாழ்வியலாகவும் கொண்டு வாழ வேண்டும்.”
“சமுதாயத்தை மாற்ற விரும்புபவர், முதலில் தன்னையும் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.”
தற்போதைய காலக்கட்டத்தில், மார்க்க அறிவிற்கும், உலக அறிவிற்கும் நம் மக்களிடத்தில் பஞ்சமில்லை மாறாக, ஒழுக்கத்தை பேணுவதிலும் கடமையை தவறாமல் செய்வதிலுமே அலட்சியம் மேலோங்கி காணப்படுகிறது.
எத்தனை ஹதீஸ்கள் தெரியும், எத்தனை கேள்விகளுக்கு பதில்கள் தெரியும் என்று மறுமை நாளில் கேட்கப்படாது.
எவ்வளவு நற்காரியங்கள் செய்தாய்? எவ்வாறு மனிதர்களிடத்தில் நடந்து கொண்டாய் என்றே இறைவன் கேட்பான்.
எச்சரிக்கை! நன்மையானவர்களுக்கே பயனளிக்கும். அப்படிப்பட்ட நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
Информация по комментариям в разработке