Sadaiyaa enumaal Saranee eanumaal / Ganasambandhar Thevaram / Thirumarugal Pathigam

Описание к видео Sadaiyaa enumaal Saranee eanumaal / Ganasambandhar Thevaram / Thirumarugal Pathigam

Vocal: Kesavaraj Krishnan
Harmonium & flute: Dr. C. Radhakrishnan
Mirudangam: Balasubramaniam Thirukumaran
Gadam: Jayalakshmi Premkumar
Morsing : Rajasegaran S. Ramasamy
Videographey : Humble Tree Production

திருச்செங்காட்டாங்குடி தரிசனம் செய்த பின் திருமருகல் தலத்தில் திருஞானசம்பந்தர் தங்கிய சமயம் அருகில் உள்ள மடத்தில் இருந்து அழுகுரல் கேட்டது.
காரணமறிய சென்றார்.
அங்கே ஒருபெண் ஒரு வாலிபன் பிணத்தருகே அழுவதை கண்டு காரணம் கேட்டார்
வளம் மிகுந் வைப்பூரில் `தாமன்' என்பவர் என் தந்தை. இவன் அவர் மருமகன். என் தந்தைக்கு ஏழு பெண்மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்தவளை இவனுக்கு மணம் செய்து தருவேன் என்று வாக்குத் தந்திருந்தார். ஆனால், பின்னர் வேறு ஒருவனிடமிருந்து நிறையப் பணம் பெற்றுக்கொண்டு, அந்த அயலவனுக்கு மணம் செய்து தந்துவிட்டார். அதன் பிறகு என் தந்தை, என்னைத் தவிர மற்ற பெண்கள் ஐவரையும் அதே போல் பிறருக்கு மணம் செய்து தந்துவிட்டார். மனம் வாடி வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு என் பெற்றோரை விட்டு நீங்கி, இவனையே சார்பாகக்கொண்டு நான் வந்தேன்.
என்னுடன் வந்த இவனும் பாம்பு தீண்டி இறந்தான். கடல் நடுவே கப்பல் கவிழ்ந்தது போல் நான் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என் துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப் போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அவளுடைய கதையை கேட்ட சம்பந்தர் மனம் பாகாய் உருகியது . ஈசன் மீது இத்தனை நம்பிக்கை வைத்து வந்த இவர்களுக்கு இத்தகைய சோதனையா ? என்று அவருக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று . மருகல் ஐயனை மனமுருக தியானித்து '' சடையா எனும் மால் சரண் நீ எனும் மால் '' எனும் பதிகத்தை பாடினார் . அவர் பாடப்பாட அப்பையன் தலையிலிருந்து விஷம் இறங்க ஆரம்பித்தது . அப்பதிகம் முடிவதற்குள் விஷம் முழுவதும் இறங்கி அவ ன் தூக்கத்திலிருந்து வீழி த்ததுபோல் விழித்து கொண்டான் .. அப்பெண்ணின் ஆனந்தத்திற்கு அளவேது ? அவன் தன்னை சுற்றி இத்தனை பேர் நிற்பதையும் மகா ஞானியாய் பாலகன் நிற்பதை கண்டு எழுந்து சம்பந்தர் காலில் விழுந்து வணங்கி தொழுதான்.

Комментарии

Информация по комментариям в разработке