Devanin kovil தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள் (1986) பல்லவி | பிரபு | இளையராஜா | சித்ரா

Описание к видео Devanin kovil தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள் (1986) பல்லவி | பிரபு | இளையராஜா | சித்ரா

படம்: அறுவடை நாள் (1986)
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே...

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி (2)
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம் (2)
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

Комментарии

Информация по комментариям в разработке