@SunderMedia This video tells about the history and purana story of Arulmigu Kamatchi Amman Mangadu which is located at chennai.
#mangadu kamatchiamman #kamatchiamman #amman #aadi #mariamman #omsakthi #hindu #goddess #chennai kamatchi #ammantemplesintamilnadu #ammantemplechennai #srichakram #arthamerusrichakram #lemongarland #yelumichaimaalai #sivanparvathymarriage #sivanparvathi #mangotree #fire #marriage #cholar #vijayanagaramempire #aadithiruvizha #koozh #neem #turmeric #kumgumam #kundam #sivan #kailayam #kailash #neivediyam #history #purunam
#ammanstory
இக்கோயில் குன்றத்தூர் பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள மாங்காட்டில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகிலேயே பேருந்து நிர்ப்பதால் நடந்துள் செலும் தொலைவில் கோயில் உள்ளது.
சுமார் 1500 வருடம் பழமையான இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பின்னர் விஜநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள். தற்போது இந்து அறநிலையத்துறை கோயிலை சுற்றி விசாலமான மண்டபம் அமைத்துள்ளனர்.
இங்கு கோயில் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும் மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையிலும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்கள் மற்றும் முக்கிய தினங்களில் பகல் முழுவதும் திறந்திருக்கும்.
இத்தலத்தின் தல விருட்சம் மாமரம் ஆகும். மாமரத்தடியில் அம்மன் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கோயிலுக்கான திருக்குளம் கோயில் மண்டபத்தின் வடதிசையில் அமைத்துள்ளது.
கோயிலின் பிரதான நுழைவு வாயில் தெற்கு பார்த்தவாறு சமிபத்தில் கட்டப்பட்ட ஏழு நிலை அலங்கார கோபுரத்தோடு அமைத்துள்ளது. மற்றொறு வாயில் கிழக்கு பார்த்தவாறு உள்ளது.
பிரதான நுழைவுவாயிலில் வினயாகர் சன்னதி அமைகப்பட்டுள்ளது.
கருவறையில் அம்மன் மூன்று விதமான வடிவங்களில் காட்சி அளிக்கிறார்:
1. ஸ்ரீசக்ரம்: மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் பிரதான தெய்வம்.
2. பஞ்சலோக ஆதிகாமாட்சி: ஸ்ரீசக்கரத்திற்கு பின்புறம் உள்ள உற்சவர் சிலை. இவளுக்கே அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
3. சிறிய காமாட்சி விளக்கு: ஆதிகாமாட்சி அருகில் எரிந்துகொண்டிருக்கும் இந்த விளக்கும் அம்பிகையாகவே கருதி வழிபடப்படுகிறது.
தவக்கோல காமாட்சி: முன் மண்டபத்தில் ஐந்து அக்னி குண்டத்தின் நடுவே தவம் செய்யும் காமாட்சி உற்சவ சிற்பமாக காட்சியைக்கிறார்.
முன்மண்டப நுழைவு வாசலுக்கு அருகே விநாயகர் சிலை உள்ளது. உள் பிரகாரத்தில் முருகர், ஆதிசங்கரர், சூரியன், பைரவர், மற்றொரு விநாயகர் சன்னதிகள் உள்ளன. இங்கு விநாயகர் கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார்.
நவகன்னிகை சன்னதியும் சிறப்பு வாய்ந்தது; அம்மன் தவம் இருந்தபோது இவர்களே காவல் புரிந்துள்ளனர்.
வெளிச்சுற்றுப்பாதத்யில் நாகரோடு ஏழு கணிமார்கள் சிலை அமைகப்பட்டுள்ளது.
கயிலாயத்தில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடியபோது, உலகம் இருளில் மூழ்கியது. கோபமடைந்த சிவன், பார்வதியை பூலோகத்தில் தவம் செய்து மீண்டும் தம்முடன் இணையும்படி சபித்தார்.
அதன்படி, பார்வதி தேவி மாங்காடு திருத்தலத்திற்கு வந்து ஐந்து அக்னி குண்டங்கள் வளர்த்து, நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரல் நுனி அக்னியில் படுமாறும், வலது காலை இடது தொடைக்கு மேற்புறமாயும், இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும், வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், அழகிய கண்களை மூடிய நிலையிலும் கடும் தவம் புரிந்தாள். தவக்காலம் நீடித்தபோதிலும், சிவன் உடனே காட்சியளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அம்பிகைக்குக் காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் அதே தலத்தில் தன்னை பூஜித்து வந்த சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். பின்னர், அசரீரியாக காஞ்சிபுரம் சென்று தவம் தொடருமாறும், அங்கு வந்து திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார்.
ஈசனை மணக்கும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், அன்னை தான் வளர்த்த அக்னி குண்டங்களை அணைக்காமல் காஞ்சிபுரம் சென்றுவிட்டாள். இதனால் மாங்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தீயின் வெப்பத்தால் வறண்டு, மக்கள் துன்புற்றனர்.
மக்களின் துன்பத்தைப் போக்க, ஆதி சங்கரர் இத்தலத்திற்கு வந்து, எட்டு வகையான மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீசக்கரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதன் மூலம் தீயின் உக்கிரம் மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர். மூலஸ்தானத்திலுள்ள அம்பாள் அதாவது ஸ்ரீசக்ரம், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பம்சம்.
இங்கு பிரசாதம் , நைவேத்தியம் , அபிஷேகம் பஞ்சலோக காமாட்சிக்கும், அர்ச்சனை ஸ்ரீ சக்கரத்திற்கும் செய்யப்படுகிறது. குங்கும அர்ச்சனை விசேஷமானது.
நேர்த்திக்கடனாக அம்மனுக்கு அதாவது ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்ரத்திற்க்கு புடவை சாத்துதல், பால் அபிஷேகம், அன்னதானம் செய்தல் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் இரண்டு எலுமிச்சைப் பழங்களுடன் அம்மனை தரிசித்து, ஒரு பழத்தைக் கோவிலில் விட்டுவிட்டு மற்றொன்றை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜை செய்ய வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில் பழைய பழத்தையும் இரண்டு புதிய பழங்களையும் எடுத்துச் சென்று, ஒரு புதிய பழத்தை மட்டும் வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜை செய்ய வேண்டும். ஆறாவது வாரத்தில் பழைய பழத்தை மட்டும் கொண்டு சென்று, அவற்றுடன் பசுவின் பாலை சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து காய்ச்சி, சுத்தமான தேனுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த பால் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கவேண்டும். இந்த ஆறு வார வழிபாட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் திருமணம் கூடும். ஆண்களுக்கும் இது பொருந்தும். புத்திர பாக்கியம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் அன்னை குழந்தை பாக்கியம் அருள்வார்.
Информация по комментариям в разработке