முன்பு ஒரு நேரத்தில் எங்கள் ஊரின் அடையாளம் தெரு முனையில் இருக்கும் இரண்டு பெரிய, உயர்ந்த, பருத்த அரச மரங்கள் தான். சிவன் கோவில் தெரு என்பது பின்னாளில் அழைக்கப்பட்டது, அதற்க்கு முன்பு எங்க ஊரு பஸ் ஸ்டாப் எடக்கியம் “அரசமரத்துஅடி” தான். 1996 எங்களை தாக்கிய புயல் இந்த உயர்ந்த எங்களின் அடையாளைத்தையும் விட்டுவைக்கவில்லை. பிறகு அந்த இடத்தில் கோவிலும், பேருந்து நிழற்குடையும் அமைந்ததால் மறுபடியும் அரசன் கன்றை நடவு செய்ய முடியாமல் போயிற்று. இன்றைய நாட்களில் எங்களின் தலைமுறை, எங்கள் பழமையை மீட்டு எடுப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது, அவ்வண்ணமே அரசின் உதவியோடு மீண்டும் இன்று ஊரின் சில முக்கிய பகுதிகளில் அரசின் கன்றுகள் நடவு செய்யப்பட்டது. எதுக்குடா அரச மரத்துக்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுக்குறானுங்கனு பாக்குறீங்களா? அதற்கான காரணத்தையும் கீழ பதிவிட்டுள்ளோம்.
அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை இதனோடு தொடர்புடைய மரங்கள் ஆகும். இந்த மரம் இருக்குமிடத்தில் அதிகமான ஆக்ஸிஜனை இருக்கும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதிமரம் இதுவேயாகும்.
மருத்துவ குணங்கள்
சித்திரை, வைகாசி மாதங்களில் மதிய வேளையில் அரசமர நிழலில் இளைப்பாறினால், தோல் சம்பந்தமான நோய்கள் தீரும்’ என்கிறது, சித்த மருத்துவம். மேலும் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படவும் உதவுகின்றது. எனவே இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் ஆரோக்கியம் கிட்டும் என்பதும் நிரூபணமாகிறது
யாக சாலைகளில் வளர்க்கும்போது, அரச மரக்குச்சிகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். அரசமர குச்சியினை எரிக்கும்போது வரக்கூடிய புகை, மூச்சுத் திணறலையும் சளித்தொந்தரவு, சோர்வு, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றையும் போக்கக்கூடியது.
மிக முக்கியமாக ’அரச மரத்தின் பழத்தை உண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்’ என்கிறது, சித்த மருத்துவம். அரச மரத்தின் அடிப்பகுதியில் கீறினால் வடியும் பாலை, பித்த வெடிப்புகளில் தடவினால் குணமாகும். அரச மரத்தின் பட்டை, வேர், விதை ஆகியவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, அதில் தேன் கலந்து 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். ஆனால் இதை முறையாக சித்த மருத்துவர்களிடம் ஆலோசித்து பின் பயன்படுத்தலாம்.
பயன்கள்
அரச இலை துளிரை அரைத்துக்கட்டினால் புண்கள் ஆறும். அரச வேர்பட்டையை 3 கிராம் எடுத்து 300 மிலி நீருடன் கொதிக்க வைத்து 100 மில்லியாக சுண்டிப்பருகினால் வெட்டைச் சூடு, சொறி , திணவு , சிரங்கு போன்ற தோல் நோய்கள் நீங்கும்.
மரப்படை தூளை தேங்காய் எண்ணெயில் கலந்து தோலின் மேல் பூசி வந்தால் தினவு புண்கள் ஆறும். அரச விதைத்தூளை அரைத்து 5லிருந்து 10 கிராம் பாலில் அருந்தி வந்தால் ஆண் மலடு நீங்கி தாது விருத்தி உண்டாகும். மலச்சிக்கலும் போக்கும். அரசு கொழுந்து காய்ச்சிக்குடி நீராக பருகினால் கடுமையான சுரம் நீங்கும்
அரசம் பழத்தை உலர்த்தி பொடி செய்து 5 கிராம் வீதம் ஒரு மாதம் உண்டுவந்தால் சுவாச நோய்களான ஆஸ்துமா கட்டுப்படும்
பெண்களும், அரச விதை அல்லது கொழுந்தை உண்டு வந்தால் பெண் மலடு நீங்கும். உடல் வன்மை பெருகும். உடல் உஷ்ணத்தினைப்போக்கும்
விஷக்கடிகள் பூசி வந்தால் பாதுகாப்பு கவசமாக இருக்கும். இளஞ்சிவன்னாப அரச மர இலையை கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் மஞ்சள் காமலை நோய் நீங்கும்.
கல்லீரலை பாதுகாக்கிறது. எனவே குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் கல்லீரல் பலப்படும். இரவு நேரத்தில் தண்ணீரில் உறவைத்த இலையை நீரைப்பருகி வந்தால் இருதயம் ஆரோக்கியம் பெரும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமஅளவு கலந்து 5 கிராம் வீதம் காலை மாலை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
#அரசமரதெரு
#போதிமரம்
#மருந்து
#இடைக்கியம்
#மரம்நடுதல்
#அரசு
www.edaikkiyam.webs.com
facebook page: எங்க ஊரு இடைக்கியம்
Информация по комментариям в разработке