விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள் | பன்னிரு திருமுறை பாராயணம் |Panniru Thirumurai Parayanam

Описание к видео விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள் | பன்னிரு திருமுறை பாராயணம் |Panniru Thirumurai Parayanam

Panniru Thirumurai Parayanam explains the stes involved in doing parayanam of panniru thirumuraigal.

பன்னிரு திருமுறை பாராயணம் - திருமுறை பாராயணம்

பன்னிரு திருமுறைகள் என்ன?

தமிழ் வேதங்கள் என்று போற்றப்படும் பன்னிரு திருமுறைகளும் இறைவனின் அருளால் அவரது அடியார்களால் பாடப்பட்டு அதை இறைவன் கேட்டு மகிழ்ந்தவைகள் ஆகும். இருபத்தி ஏழு திருமுறை ஆசிரியர்கள் இறைவனது அருள் பெற்றுப் பாடிய சைவத்திருமுறைகளை பதினொன்றாக வகுத்துத்தவர் நம்பியாண்டார் நம்பி களாகும். அதன் பிறகு சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை யாக சேர்க்கபட்டது.

பன்னிரு திருமுறைகளில் உள்ள நூல்கள் யாவை ? அருளியவர் யாவர் ?

• மூதல் மூன்று திருமுறைகள் - அருளியவர் திருஞானசம்பந்தர்.

• நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள் – அருளியவர் திருநாவுக்கரசர்.

• ஏழாம் திருமுறை – அருளியவர் சுந்தரமூர்த்திசுவாமிகள்.

• எட்டாம் திருமுறை (திருவாசகம் , திருகோவையார்) – அருளியவர் மாணிக்கவாசகர்.

• ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு) அருளியவர்கள் -. திருமாளிகைதேவர், சேந்தனார், கருவூர்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தா, வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமநம்பி, சேதிராயர்.

• பத்தாம் திருமுறை ( திருமந்திரம்) – அருளியவர் திருமூலர்.

• பதினோராம் திருமுறை அருளியவர்கள்- திருவாலவாயுடையார், காரைக்கால்அம்மையார், ஐயடிகள்காடவர்கோன், சேரமான்பெருமாள்நாயனார், நக்கீரர்தேவர், கல்லாடதேவர், கபிலதேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டிடத்தடிகள், நம்பியாண்டார்நம்பி.

• பன்னிரண்டாம் திருமுறை ( பெரியபுராணம் ) – அருளியவர் சேக்கிழார் .

திருஞானசம்பந்தர் பாடியவற்றை திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசர் பாடல்களை தேவாரம் என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் கூறுவர்.

திருமுறைகள் ஓதும் முறை :

• காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.

• சுத்தமாக இருந்து, திருநீறணிந்து பூசை அறையில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர வேண்டும்.

• முதலில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பிறகு விநாயகப்பெருமானைத் துதிக்க வேண்டும். இதனை அடுத்து நால்வர் துதி பாடலளைப் பாட வேண்டும்.

• அதன் பின்னரே, அவரவர்கள் விரும்பும் பதிகங்களை பக்திச் சிரத்தையுடன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) நாள்தோறும் இடைவிடாமல் மன உறுதியுடன் ஓதுதல் வேண்டும்.


விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தங் கை.

நால்வர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

• பதிகங்களைத் துவங்குவதற்கு முன்பாகவும் முடித்த பின்னர் "திருச்சிற்றம்பலம்" என்று கூறுதல் வேண்டும்.

• குளிப்பது எப்படி தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறதோ அதே போல, சில நிமிடங்கள் செலவிட்டு இந்த பதிகங்களை ஓதுவதும் நமது அன்றாட நடவடிக்கையாக இருக்கவேண்டும்.

#aalayamselveer #panniruthirumuraiparayanam

Комментарии

Информация по комментариям в разработке