25 ஆயிரம் ஆண்களுக்கு படைக்கப்பட்ட மெகா கிடா கறி விருந்து 🔥😲Karumparai Muthaiya Temple - Madurai

Описание к видео 25 ஆயிரம் ஆண்களுக்கு படைக்கப்பட்ட மெகா கிடா கறி விருந்து 🔥😲Karumparai Muthaiya Temple - Madurai

Madurai Karumparai Muthaiyah Temple Kari Virunthu

மதுரை கரும்பாறை முத்தையா கோவில் அசைவ திருவிழா !!!

25 ஆயிரம் ஆண்களுக்கு படைத்த மெகா கறி விருந்து !!


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராமம் உள்ளது. இங்கு காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. கோவிலில் வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது அந்த ஆடுகளை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.


காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 90 ஆடுகள் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன. 50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால் அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பு கறிகளை மட்டும் தனியாக பிரித்து ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து விடுவார்கள்.

முதலில் கறியை வைத்து அதன் பின் சாதம், அதன் பின் கறி குழம்பு ஊற்றி அன்னதானம் நடைபெறும். இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த இலைகள் காய்ந்து, அங்கிருந்து மறைந்த பிறகே பெண்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவர். மே 18 அன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு அன்னதான விழாவிற்காக பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனாக ஆடுகளை வழங்கினர். நேர்த்தி கடனாக வழங்கப்படும் ஆடுகள் கருப்பு ஆடுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
For Business Promotion Collaboration Mail Us : [email protected]

WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )

Follow me on Facebook https://www.facebook.com/RamkannanUtu...


Follow Us Here For Vlogs Updates
Me : https://instagram.com/ramkannan_utube...


#Ramkannan #madurai #maduraitemple #tamil #karumparaitemplefestival

Комментарии

Информация по комментариям в разработке