இதனால தான் இந்த கோவிலுக்கு யாருமே வர மாட்டேங்குறாங்க..? |பிரவீன்மோகன்

Описание к видео இதனால தான் இந்த கோவிலுக்கு யாருமே வர மாட்டேங்குறாங்க..? |பிரவீன்மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohantamil  
Instagram................   / praveenmohantamil  
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - அறிமுகம்
00:06 - இந்து கோவிலில் புத்தர்
02:13 - Backpack போட்டிருக்கும் மர்ம மனிதர்கள்
03:26 - பாறைக்கு கீழ் வசிக்கும் பாம்புகள்
04:26 - பல தலைகள் கொண்ட பாம்பு
05:28 - சிற்பத்தில் மறைந்துள்ள நகைச்சுவை
06:19 - பறவைகளில் மறைந்துள்ள இன்னொரு கால்
07:52 - தந்தங்களில் உள்ள ரகசியம்
09:25 - கோவிலா? தேரா?
10:08 - மம்மிகளின் சிற்பமா?
10:34 - மர்மமான கிருஷ்ணரின் சிற்பம்
13:01 - பாம்பின் மீது உள்ள மோகம்
14:06 - பழங்காலத்து செல்ஃபி
16:06 - முடிவுரை

Hey guys, நாம இன்னைக்கு வீரநாராயண கோவில்ல இருக்கற விசித்திரமான சிற்பங்கள தான் பாக்க போறோம். மொதல்ல இருக்கற இந்த சிற்பம் தான் உண்மையிலேயே நம்மள ரொம்ப shock ஆக்குது. இது புத்தரோட பெரிய scale model. இது எண்ணூறு வருஷம் (800) பழமையான ஹிந்து கோவில். ஆனா அவங்க front wall-ல புத்தர பெரிய சிற்பமா செதுக்கி வச்சுருக்காங்க. இது இன்னைக்கு இருக்கற நெறய பேருக்கு ரொம்பவே shocking-ஆ இருக்கும், ஏன்னா அவங்க ஹிந்து மதமும், புத்த மதமும் complete-ஆ வேற வேற மதங்கள்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. In fact, பழங்காலத்துல இந்த ரெண்டு மதமும் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்ட போட்டுட்டு இருந்தாங்கன்னு நெறய பேரு சொல்றாங்க. ஆனா இங்க நீங்க, correct-ஆ கோவிலுக்கு முன்னாடி இருக்கற இந்த பெரிய புத்தர் சிற்பத்த பாக்கலாம்.

அதே size-ல பக்கத்துல ஹிந்து கடவுள் கிருஷ்ணர் இருக்காரு. So பழங்காலத்து ஸ்தபதிங்களுக்கு புத்தர ஒரு ஹிந்து கடவுளா ஏத்துக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா படையெடுத்து வந்தவங்க complete-ஆ இத அழிச்சுட்டாங்க. இத அவங்க மேல இருந்து, கீழ வரைக்கும் சிதைச்சுருக்குறத நீங்களே இங்க பாக்கலாம். இது இப்படி சிதைஞ்சுருக்குறதுனால, இவரு புத்தர் இல்ல, வேற ஏதோ ஹிந்து சாமி அப்படின்னு Experts-லாம் சொல்றாங்க. ஆனா இது புத்தர் தான். இவரு meditation pose-ல (தியானம் பண்ணிட்டு) இருக்காரு அப்படின்றத, இவரோட கையே (hand signals-யே) நமக்கு தெளிவா சொல்லுது. இந்த கோவிலோட main (மூலவர்) சிலைலயும் இவர செதுக்கிருக்கறத நீங்க பாக்கலாம். அது ரொம்ப சின்னதா இருக்கு, ஆனாலும் நம்மளால அது புத்தர் தான்னு easy-ஆ அடையாளம் கண்டுபிடிக்க முடியுது.

இங்க பக்கத்துல இருக்கற இன்னொரு ஹிந்து கோவில்லயும் புத்தர செதுக்கிருக்கறத நான் ஏற்கனவே உங்களுக்கு காட்டிருக்கேன், நியாபகம் இருக்கா? ஆமா, அது சென்னகேசவா கோவில்ல இருக்கற புத்தர் தான். ஆனா இந்த சிற்பத்த உண்மையிலேயே ஒரு பெரிய பொக்கிஷம்ன்னு தான் சொல்லணும், ஏன்னா மீதியெல்லாமே ரொம்ப சின்ன சிலை-ங்க தான். நான் பாத்த வரைக்கும் ஒரு ஹிந்து கோவில்ல இருக்கற பெரிய புத்தர் சிலை-ன்னா, அது இது தான். ஆனா இது கிட்டத்தட்ட அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கு அப்படின்றது shame-ஆன (அவமானமான) ஒரு விஷயம் தான். புத்தருக்கு அடுத்து கடவுள் கிருஷ்ணர் இருக்கறத உங்களால பாக்க முடியும். அவரு புல்லாங்குழல் வாசிச்சுட்டு இருக்காரு, எல்லாரும் அவரோட இசைக்கு மயங்கி போய் இருக்காங்க. மனுஷங்க மட்டும் இல்ல, மிருகங்க கூட அவரோட இசைக்கு complete-ஆ மயங்கி இருக்குது.

ஆனா அங்க ஏதாவது விசித்திரமா இருக்கற மாறி உங்களுக்கு தெரியுதா? இங்க இருக்கறவர் ஒரு backpack-அ போட்டுருக்காரு, அது இன்னைக்கு இருக்கற backpack மாறியே இருக்குது. அது ஒரு தனி bag-ன்னு தெளிவா காட்டிருக்காங்க, ஆனா அவரு அத போட்டுருக்காரு. இது உண்மையிலேயே ரொம்ப fantastic -ஆ இருக்குல்ல? Backpack கடந்த நூறு வருஷமா தான் பயன்படுத்துறாங்கன்னு நாம நினைச்சுட்டு இருந்திருப்போம், ஆனா இது எண்ணூறு வருஷம் பழமையானது. இங்க மரத்துக்கு கீழ இன்னொரு மனுஷனோட சிற்பம் இருக்குது. இது ரொம்ப confusion-ஆ இருக்கு. ஏன்னா இத பத்தின full details-யும் என்னால புரிஞ்சுக்க முடியல. அவரையும் Backpack போட்டுருக்கற மாறி தெளிவா காட்டிருக்காங்க. அத பாக்குறப்ப அவரு அந்த Backpack-அ remove பண்ற (கழட்டுற) மாறி தெரியுது. இந்த சிற்பத்துல இன்னொரு விசித்திரமான அம்சம் இருக்கு, ஒரு விசித்திரமான மிருகம் மரத்துல ஒளிஞ்சுட்டு இருக்கு பாருங்க.

இந்த சிற்பத்துல நீங்க மலைய பாக்கலாம், அப்படி இல்லனா அத நீங்க நெறய மரங்களும் மிருகங்களும் இருக்கற ஒரு பெரிய பாறைன்னு கூட நினைச்சுக்கோங்க. அந்த மலைய தூக்கிட்டு இருக்கறது வேற யாரும் இல்ல, கிருஷ்ண பகவான் தான். பாறைக்கு அடில இருந்து பாம்புங்க வெளில வர்றத கூட இங்க உங்களால பாக்க முடியும். இது ரொம்பவே amazing-ஆன detail, ஏன்னா பாம்புங்க எல்லாம் mostly கல்லுக்கு அடில தான் மறைஞ்சுருக்கும். நான் என்னோட சின்ன வயசா இருக்கும் போது, சின்ன கல்லுங்கள புரட்டி பாக்குறப்ப அதுக்கு கீழ மண்புழுவ பாத்தது எனக்கு நியாபகம் இருக்கு. ரொம்ப excite ஆகி பெரிய கல்லுங்கள புரட்டி பாக்குறப்ப, சில நேரத்துல அதுல பாம்பு கூட இருந்துருக்கு. கல்லுக்கு கீழ நல்லா இருட்டா, ஜில்லுன்னு (ஈரமா) இருக்கறதுனால தான் மண்புழுவும், பாம்பும் அதுல போய் இருக்குதுன்னு நினைக்குறேன். ஒரு வேள அந்த மாறி ஒரு இடம் தான் அதுங்க வாழுறதுக்கு ஏத்த இடமா கூட இருக்கலாம்.

ஆனா இந்த details-அ பாக்குறப்ப பழங்காலத்து ஸ்தபதிங்க எந்த அளவுக்கு (எப்படி) உத்து கவனிச்சுருக்காங்கன்னு நமக்கு தெரியுது. இங்க நீங்க இன்னொரு பாம்பு இருக்கறத பாக்கலாம், இந்த பாம்ப அஞ்சு தல இருக்கற மாறி காமிச்சுருக்காங்க. கிருஷ்ணரோட காலத்துல இந்த மாறி பாம்புங்க இருந்துருக்குமா? கிருஷ்ணர் ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தாருன்னு சொல்றாங்க.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Комментарии

Информация по комментариям в разработке