கெலமங்கலம், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில், கூடுதல் கட்டிட பணிகள் துவக்கம்.

Описание к видео கெலமங்கலம், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில், கூடுதல் கட்டிட பணிகள் துவக்கம்.

கெலமங்கலம், அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில், கூடுதல் கட்டிட பணிகள் துவக்கம். மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் செயல்பட்டு வரும், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், 68 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில், தாய் சேய் நல கூடுதல் கட்டிடத்திற்கான பணிகள் துவக்க விழா, நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், திருமதி சரயு, தளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன், ஆகியோர் பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தனர்.

மேலும், கெலமங்கலத்தை சுற்றியுள்ள ஏராளமான மலை கிராமங்களுக்கு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், டாட்டா எலக்ட்ரானிக்ஸ் சார்பில், பெருநிறுவன சமூக சுற்றுசூழல் பங்களிப்பு நிதியின் கீழ், 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 25 இருக்கைகள் கொண்ட, தாய் சேய் நல வாகனமும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி, துவக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களை, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும், கலந்து கொண்டனர்.

இதன் வாயிலாக, தளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏராளமான மலை கிராம, பழங்குடியின மக்கள், மருத்துவ வசதி பெறுவதற்கு, மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்திய, பெட்டமுகிலாலம் மற்றும் கொடகரை ஆகிய மலை கிராமங்களில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை, விரைவில் நிறைவேற்றப்படும், என்று தளி சட்டமன்ற உறுப்பினர், ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Комментарии

Информация по комментариям в разработке