பொது வெளிகளில் மரங்கள் வளர்க்கும் பணி .கிராமத்தின் ஒவ்வொரு பிறந்த நாட்களும் புதிய திருமண தம்பதிகள் கரங்களாலும் குறைந்தது ஒரு மரக்கன்றை நட்டு சிறப்பிக்கப்படுகிறது மரங்களின் நண்பர்கள் அமைப்பு சிறுவர்களால் .ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நெகிழியை தவிர்க்கும் பொருட்டு மட்கக்கூடிய காடாத்துணி களையே பயன்படுத்துகிறோம் .ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை விதைத்து மற்றும் அருகில் உள்ள கிராம நண்பர்களுடன் இணைந்து பயணிக்கிறோம்.திருமணங்களில் துணிப்பைகளை பரிசாக தந்து நெகிழி தவிர்ப்பதற்காக போராடி வருகிறோம் .பொதுக் கிணறுகளில் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளை சுத்தம் செய்தல் .இழந்த பண்பாட்டினை மீட்டெடுப்பதற்காக சிறுவர்களைக் கொண்டு கூட்டாஞ்சோறு நிகழ்ச்சியை நடத்தியது ...காற்று மற்றும் இயற்கை சீற்றம் சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களை கொண்டு வந்து பதிய முறையில் நட்டு புதிதாக உயிர்ப்பிக்கிறோம்...மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பதற்காக வீடுதோறும் சேலைகளை வாங்கியும் மற்றும் இயற்கை உரம் பயன்படுத்தியும் வனம் காத்துவருகிறோம் ...பல்லுயிர் தன்மையையும் உயிர்ச் சூழலையும் பாதுகாக்க பாடுபட்டு வருகிறோம் மரங்களின் நண்பர்களாக...