'IT Jobல கிடைக்காத நிம்மதி, Organic Farmingல கிடைச்சது!’ - Archana Stalinஇன் உண்மை கதை! | DW Tamil

Описание к видео 'IT Jobல கிடைக்காத நிம்மதி, Organic Farmingல கிடைச்சது!’ - Archana Stalinஇன் உண்மை கதை! | DW Tamil

உறுதியற்ற வருவாய் காரணமாக விவசாயத்தை விட்டு பலர் வெளியேறி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாதம் வெறும் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்த திருவள்ளூரை சேர்ந்த விவசாயியான ரமேஷ் , இன்று இயற்கை விவசாயம் மூலம் 8 மடங்கு அதிகமாக சம்பாதித்து வருகிறார்.

ரமேஷின் வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்புமுனைக்கு காரணம் அர்ச்சனா ஸ்டாலினின் 'My Harvest' நிறுவனம். இடைத்தரகர்களின்றி விவசாயிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்து அதை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம். இதுதவிர விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கச் செய்வதையும் உறுதிப்படுத்தி வருகிறது.

ரமேஷ் போன்ற பல விவசாயிகளின் வாழ்வில் அர்ச்சனா ஸ்டாலின் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தினார்? இவரின் இந்த முயற்சி எப்படி தமிழ்நாட்டின் பாரம்பரிய பயிர்களை அழிவிலிருந்து காத்து வருகிறது?

தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து DW Tamil உருவாகியுள்ள பிரத்யேக தொடர் #feedingmillions இன் முதல் காணொளியில் இதைப்பற்றி சற்று விளக்கமாக பார்க்கலாம்.

#whoisarchanastalin #organicfarmingintamil #isorganicfoodreallyworth #organicfarmingbusiness #dwtamilvideos

தயாரிப்பு:

அதீதி ராஜகோபால்
பிரசாந்த் சுந்தரமூர்த்தி

காட்சிப்பதிவு:

நந்த கிஷோர்

Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке