அரிய வகை உலர் வெப்ப மண்டல காட்டு மரங்களை மீட்டு எடுக்கும் இளைஞர் | Tree Diversity in Eastern Ghats

Описание к видео அரிய வகை உலர் வெப்ப மண்டல காட்டு மரங்களை மீட்டு எடுக்கும் இளைஞர் | Tree Diversity in Eastern Ghats

Tree species diversity in the Eastern Ghats | Tropical Dry Evergreen Forest

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வனவிலங்குகள் காடுகள் பாதுகாப்பது,வன உயிரினங்களை ஆய்வு செய்வது,ஆபத்தான நிலையில் இருக்கும் வனவிலங்குகளை மீட்பது,அழியும் நிலையில் உள்ள உலர் வெப்ப மண்டலா தாவரங்கள்,மரங்கள் இவற்றில் இருந்து விதை சேகரித்து அதை நாற்றுகளா உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் விழுப்புரத்தை சேர்ந்த ராம் அவர்கள்.

உலர் வெப்ப மண்டல பசுமை மாறா காடுகள் மற்றும் வெப்பமண்டல காடுகள் இருக்கும் பகுதியை அதாவது கோவில் காடுகள், இயற்கையாக உருவான காடுகள் இடங்களை பதிவு செய்தல் மேலும் அந்த காடுகளில் இருக்கும் மரங்களை பற்றிய ஆய்வு செய்தல் அழிவின் விளிம்பில் உள்ள காட்டு மரங்களின் விதைகளை சேகரித்து கன்றுகள் உருவாக்கி மரங்களை காட்டுப்பகுதிகளில் நடுதல்,உலர் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள் வெப்பமண்டல காடுகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடமும், மாணவர்களிடமும் ஏற்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் (Eastern ghats) பகுதிகளில் உள்ள மரங்களின் விதைகளை சேகரித்து அந்த விதைகளை எவ்வாறு முளைக்க வைப்பது என்பதைப் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார் ராம்.நம்நாட்டு உள்ளூர் மரங்களை நமது வீடுகளில் எவ்வாறு அழகு தாவரமாக பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை மீட்டெடுப்பது விதை சேகரிப்பது,காடுகளை வளர்த்தல் போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார்

வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வரும் நபர்களை வனவிலங்கு ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தி.வேட்டையாடிய நபர்கள் தங்களை மாற்றிக்கொண்டு வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்..

வனவிலங்கு ஆய்வு: கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்கள் படாமல் இருக்கின்றன அவ்வாறு சில உயிரினங்களை கண்டறிந்து அந்த இடங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வுகளில் பதிவு செய்து வைத்துள்ளோம் மேலும் அவ்வாறு சில உயிரினங்களை தாங்கள் குழு கண்டுபிடித்து அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது

அவ்வப்போது வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கணக்கெடுப்பில் மர இனங்கள் ,பறவை இனங்கள்
வன விலங்கு இனங்கள், ஊர்வன இனங்கள், பூச்சியினங்கள் போன்றவைகளை ஆய்வுகள் செய்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளார்..

பாம்புகளைப் பற்றிய விழிப்புணர்வு,காடுகள்,மலைகள்,நீர்நிலைகள்,வன பறவையினங்கள்,ஊர்வன வகைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவ மாணவியர் ஏற்படுத்தி வருகிறார்.

K. RAMAN
INDIGENOUS BIODIVERSITY FOUNDATION MEMBER
உயிர்மூச்சு காட்டு மர பண்ணை,
இடம்: கண்டமங்கலம்,
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி எண் : 96268 06534

மரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இனங்களும் பற்றி நிறைய விடயங்கள் அறிந்த நரிக்குறவ சமுதாய மக்கள் | indigenous people of tamilnadu promised to save indigenous trees,birds and animals of indigenous forest on the june 5,2022 World Environment Day    • மரங்களும் அது சார்ந்து வாழும் உயிர் இ...  

Support sirkali tv team to produce more videos on different subjects..
   / @sirkalitv  

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube:    / sirkalitv  
facebook:   / sirkalitv  

Комментарии

Информация по комментариям в разработке