DEVA song for Melmaruvathur AMMA | AMMA ENGA AMMA - அம்மா எங்க அம்மா | 50th Aadipooram festival

Описание к видео DEVA song for Melmaruvathur AMMA | AMMA ENGA AMMA - அம்மா எங்க அம்மா | 50th Aadipooram festival

DEVA song for Melmaruvathur AMMA

Music: #Deva (Thenisai Thendral Deva) for Adhiswara
Lyrics: #Kadhalmathi


பல்லவி
அம்மா எங்க அம்மா மேல்மருவத்தூர் அம்மா
எங்க மக்கள காக்குற அம்மா!
இந்த ஆடிப்பூரத்துல நாடி ஓடி உன்னத்
தேடி வந்தோமே அம்மா!
எங்க கவலை எல்லாம் சும்மா!

அனுபல்லவி
தொப்புள் கோடி உறவாக
ஒரு தாய் மக்களாக
எல்லோரும் வந்தோமே
குலதெய்வம் நீயம்மா!

கோரஸ்
நெஞ்சு கனக்குற பக்தி பெருக்குல கஞ்சிக்கலயத்தைத் தாங்கி வந்தோம்!
வெள்ளை மனசோட வேப்பிலை நாயகி பாலாபிஷேகத்தைக் காண வந்தோம்!
(அம்மா எங்க அம்மா..)

சரணம் 1
எள்ளு வய பூக்கலையே
தென்ன வனம் காய்க்கலையே
சொல்லி கொள்ள சொந்தமுன்னு
யாரும் வந்து பாக்கலையே

எம்மா ஆலை எல்லாம் தூங்கிடவே
வேல ஒண்ணும் காணலையே
ஊர விட்டுப் போறதுக்கும்
பஸ் வண்டி போகலையே
மகாமாரி நோயொண்ணு ...
மகாமாரி நோயொண்ணு
கிட்ட வந்து அண்டாம
எல்லையோரம் நீ இருந்து
மகாமாரி நோயொண்ணு
கிட்ட வந்து அண்டாம
எல்லையோரம் நீ இருந்து
எங்களைத்தான் காத்தாயம்மா!
ஆத்தாளே நெஞ்சுல பூத்தாளே
உன்னப் பார்த்தாலே
போதும் அம்மா.. அம்மா
(அம்மா எங்க அம்மா..)

சரணம் 2
கார்மேகக் கண்ணீரு
ஊருக்கெல்லாம் பால் சோறு
காப்பாத்த நீ இல்லேன்னா
எங்களுக்கு வேற யாரு?

துன்பமுன்னு நாங்க அழுதா
துடைப்பது நீயம்மா
எங்களுக்காக நீ அழுதா
ஏழை மனம் தாங்கிடுமா!
பாலாபிஷேகம் செஞ்சோம் நெஞ்சுக்குள்ள பால் வார்த்த
வேப்பிலையில் மந்திரிச்சு நீ வேதனையத் தான் தீர்த்த
செவ்வாட கட்டிய காமாட்சி
அன்னை நீ பங்காரு சக்தியம்மா ..அம்மா
(அம்மா எங்க அம்மா..)

Комментарии

Информация по комментариям в разработке