Malai kovil | மலைக்கோயில் வாசலில் | Lyrics | Mano&Swarnalatha | Veera | Rajin,Meena,Roja

Описание к видео Malai kovil | மலைக்கோயில் வாசலில் | Lyrics | Mano&Swarnalatha | Veera | Rajin,Meena,Roja

இசை :இளையராஜா
பாடகர் :மனோ, ஸ்வர்ணலதா
படம் : வீரா 1994
பாடல் : மலைக்கோயில் வாசலில்
கவிஞர் :வாலி
நடிகர்கள் :ரஜினிகாந்த், ரோஜா, மீனா

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்துச் சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு
ஆயிரம் சுகங்களையே (2)

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

நாடகம் ஆடிய பாடகன் ஓ..ஓஓஓ
நீ இன்று நான் தொடும் காதலன் ஓ..ஓஓஓ

நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பேரழகும் சின்ன தேரழகும்
உன்னை சேராதா உடன் வாராதா

மானழகும் கெண்டை மீனழகும்
கண்கள் காட்டாதா
இசை கூட்டாதா

பாலாடை இவன் மேலாடும்
வண்ண நூலாடை இனி நீயாகும்

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
1ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்துச் சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு
ஆயிரம் சுகங்களையே

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே

நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ
நீள் குழல் மீதினில் ஆடவோ ஓ

நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்

பூங்கரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்துச் சுடரே சுடரே கொடு
வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே கொடு
ஆயிரம் சுகங்களையே (2)

மலைக்கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

Комментарии

Информация по комментариям в разработке