Ennulle ennulle | என்னுள்ளே என்னுள்ளே | Lyrics | Ilayaraja | Swarnalatha | Valli

Описание к видео Ennulle ennulle | என்னுள்ளே என்னுள்ளே | Lyrics | Ilayaraja | Swarnalatha | Valli

இசை :இளையராஜா
பாடகர் :ஸ்வர்ணலதா
படம் :வள்ளி
பாடல் :என்னுள்ளே என்னுள்ளே
கவிஞர் :வாலி
நடிகர்கள் :ரஜினிகாந்த், பிரியா ராமன்

ஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ{2}

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் {2}

நான் மெய் மறந்து மாற
ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

ஆஹ ஆஹ ஆஹா
ஆஹ ஆஹ ஆஹா
ஆஹ ஆஹ ஆஹா
ஆஹ ஆஹ ஹா

கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

ஆஆஆஆ...
ஆஆஆஆ...
ஆஆஆஆஆ...{2}

கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம் {2}

Комментарии

Информация по комментариям в разработке