Part-3 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

Описание к видео Part-3 - கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986

கிருபானந்த வாரியார் - கருணைக் கடல் முருகன் - Kripananda Variyar - 1986
----------
இப்பகுதியில் இடம் பெறும் சில பாடல்கள்:
15:05
( https://www.kaumaram.com/thiru/nnt016... )
திருப்புகழ் - திமிர உததி - (பழநி)
திமிர வுததி யனைய நரக
.. .. செனன மதனில் ...... விடுவாயேல்
.. செவிடு குருடு வடிவு குறைவு
.. சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
.. .. மறிவு நிறையும் ...... வரவேநின்
.. அருள தருளி யெனையு மனதொ
.. .. டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
.. .. தலைக ளுருள ...... மிகவேநீள்
.. சலதி யலற நெடிய பதலை
.. .. தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
.. .. விழிகள் நளினன் ...... மருகோனே
.. மிடறு கரியர் குமர பழநி
.. .. விரவு மமரர் ...... பெருமாளே.

21:20
( https://www.kaumaram.com/thiru/nnt098... )
திருப்புகழ் - (இராமேசுரம்)
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு ...... பொருள்தேடி

வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல ...... சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி ...... யுறுநாளிற்

சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமென நாறியுட ...... லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு ...... மிளையோனே

நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழு
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் ...... பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவெ
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் ...... பெருமாளே.

26:35
( https://kaumaram.com/thiru/nnt1124_u.... )
திருப்புகழ் - (பொது)
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
.. .. அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
.. .. அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய
.. அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
.. .. முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
.. .. அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றதொருகாலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
.. .. நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
.. .. நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ...... ரித்தபெருமானும்
.. நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
.. .. பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
.. .. நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ...... ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
.. .. டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
.. .. தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
.. தனதனன தனதனன தந்தந்த னத்ததன
.. .. டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
.. .. தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு ...... டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
.. .. அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
.. .. முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ...... ளத்திலொருகோடி
.. முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
.. .. நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
.. .. முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ...... ளித்தபெருமாளே.

30:20
( https://www.kaumaram.com/thiru/nnt129... )
திருப்புகழ் - (பொது)
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
.. நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
.. மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
.. வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
.. நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

32:24
( https://kaumaram.com/alangkaram/alang... )
கந்தர் அலங்காரம் - 40
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

----------

Комментарии

Информация по комментариям в разработке