Thirupugazh 232 | குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்

Описание к видео Thirupugazh 232 | குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்

#Thirupugazh_Song_232 #Vaadhamodu_soolai #Swamimalai_Thirupugazh
குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு,
நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.
......... பாடல் .........

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்

வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்

பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்

பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
பாவமது பான முண்டு ...... வெறிமூடி

ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்

ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்

சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழுமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்

தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,

வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள்,

பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து,

இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,

குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு,

நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.

மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும்,

தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே.


THIRUPUGAZH | திருப்புகழ் | - A Channel from THIRUTHALAM Tv.
Exclusively Thirupugazh for Lord Murugan Deveotees.

Kartikai pengal, the maidens who brought up Lord Muruga, wanted to acquire the ashtamasiddhis (eight extraordinary powers). Lord Siva told them that these were difficult to attain. Ordinary mortals cannot attain the ashtamasiddhis, Saints who have these siddhis, usually do not display them. The eight siddhis are anima, mahima, garima, laghima, praapti, praakaamya, Isitva and vasitva. Anima is the ability to make oneself smaller than an atom. Mahima is the ability to make oneself larger at will. Garima is the ability to increase one’s weight. Laghima, likewise, is the ability to decrease one’s weight at once.

Praapti is the ability to go wherever one pleases, whenever one wishes to. Praakaamya is the ability to obtain anything at will. This includes the ability to exit one’s body and inhabit another. Isitva is the power to create, protect and destroy. Vasitva is the ability to control everything. From a reading of these properties of the eight siddhis, it seems as if none by God Himself can have these siddhis. But there have been saints who have had this power. Thirumoolar, for example, was easily able to leave his body and enter another’s.

Arunagirinatha says that if one reads Thiruppugazh, which he wrote in praise of Lord Muruga, then the ashtamasiddhis will come within one’s reach. He says that if we read the Thiruppugazh, we need not fear death. We will not experience sorrow. We need not fear our enemies. Arunagirinatha prays that when Yama, the god of death comes with his rope, to separate the soul from the body, Lord Muruga should appear, with the comforting words “Do not be afraid.” He says that he conquered the three malams and obtained jnana, and then through Muruga’s grace, he sang the Thiruppugazh.

Комментарии

Информация по комментариям в разработке