அபிஷேகத்தின் வல்லமை நான் நேசிப்பதை துண்டிக்க வைக்கும் 🔥🔥

Описание к видео அபிஷேகத்தின் வல்லமை நான் நேசிப்பதை துண்டிக்க வைக்கும் 🔥🔥

1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கை போட்டான். அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும். அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
1 சாமுவேல் 11:1

2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தையை வரப் பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.
1 சாமுவேல் 11:2

3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாதிபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணை கொடும். எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
1 சாமுவேல் 11:3

4 அந்த ஸ்தானாதிபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள். அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
1 சாமுவேல் 11:4

5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிருந்து வந்து, ஜனங்கள் அழுத முகாந்தரம் என்ன என்று கேட்டான். யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
1 சாமுவேல் 11:5

6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,
1 சாமுவேல் 11:6

7 ஓரிணை மாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாதிபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான். அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.
1 சாமுவேல் 11:7

8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான். இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம்பேரும், யூதாமனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
1 சாமுவேல் 11:8

Комментарии

Информация по комментариям в разработке