சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

Описание к видео சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?

நமது திருஅருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், வேட்டவலம் ஜாமீன்தார் மாளிகைக்கு சென்றார்! அவர் வீட்டு வாசல் படியை மிதித்தது தான் வேட்டவலம் ஜாமீன் மனைவியை பிடித்த பிரம்ம ராட்சசன் ஐயோ நான் போகிறேன் என்று ஓடி விட்டது! வள்ளலார் ஒன்றும் செய்யவில்லை! அவர் காற்று பட்டதுமே காத்து கருப்பு எல்லாம் காத தூரம் ஓடிவிட்டது?! இது தான் ஞானி லட்சணம்!

அங்கே காளியால் கர்ம வினை தீராது என்று கூறப்பட்ட விஷயம் இங்கே ஞான சற்குருவால் வள்ளலாரால், வள்ளலாரை கண்டதுமே தீர்ந்தது! “குரு பார்க்க கூடி வினை தீரும்” அதற்க்கு இது ஒரு உதாரணம்! அது மட்டுமா? வேட்டவலம் ஜமீன் மனைவிக்கு தீராத மகோரதம் வியாதி வள்ளலார் விபூதி கொடுக்க உடனே குணமானது! சுத்த ஞானிகள் கைபட்ட கால்பட்ட மண்ணே பொன் ஆகும்போது? பேய்கள் ஓடாதா? நோய்கள் தீராதா? இப்போது புரிந்ததா? சிறு தெய்வங்களால் நமக்கு ஒரு பிரயோஜனம் இல்லை!?

ஞானியை பணிந்தால் அவரே நம் குருவாகி தாயாகி தந்தையாகி நம் கர்மவினைகளை போக்கி நம்மை கடவுளிடம் சேர்ப்பார்! இது சத்தியம்!

Комментарии

Информация по комментариям в разработке