முஹம்மது நபியை முஸ்லீம்கள் ஏன் நேசிக்கின்றனர்?

Описание к видео முஹம்மது நபியை முஸ்லீம்கள் ஏன் நேசிக்கின்றனர்?

நபிகளாரின் மீதுள்ள பிரியத்தால் அவர்களின் புனித உடம்பை முத்தமிடும் பாக்கியம் பெற்ற சஹாபீ

عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ رَجُلٍ مِنْ الْأَنْصَارِ قَالَ بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ وَكَانَ فِيهِ مِزَاحٌ بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ أَصْبِرْنِي فَقَالَ اصْطَبِرْ قَالَ إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رَسُولَ اللَّهِ (ابن ماجة- بَاب فِي قُبْلَةِ الْجَسَدِ- كِتَاب الْأَدَبِ

உஸைத் இப்னு ஹுழைர் என்ற நபித்தோழர் தமாஷாகப் பேசுவார். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களும் விளையாட்டாக அவரது இடுப்பில் ஒரு குச்சியால் குத்தினார்கள். இதன் பின்பு அந்த சஹாபீ யாரஸூலல்லாஹ் என்னுடைய இடுப்பில் நீங்கள் குத்தி வலியை ஏற்படுத்தி விட்டீர்கள். எனவே அதற்குப் பழிக்குப் பழியாக நான் உங்களை அதே போன்று குத்துவதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டும் என்ற போது நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். அப்போது அவர் யாரஸூலல்லாஹ் நீங்கள் என்னைக் குத்தும்போது என் உடம்பில் சட்டை இருந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் உடம்பில் சட்டை உள்ளதே என்று கூற, நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை உயர்த்திக் காண்பிக்க, அவர் நபி (ஸல்) அவர்களைக் கட்டியணைத்து அவர்களின் புனித மேனியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ் இதைத் தான் நான் விரும்பினேன் என்றார்.

மேற்படி ஹதீஸ் பின்வரும் அறிவிப்பில் ஸவாத் ரழி என்ற சஹாபீ விஷயமாக வருகிறது

عن سَوَاد بْن عَمْرٍو قَالَ : أَتَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَأَنَا مُتَخَلِّقٌ بِخَلُوقٍ فَلَمَّا رَآنِى قَالَ لِى :« يَا سَوَادُ بْنَ عَمْرٍو خَلُوقُ وَرْسٍ أَوَلَمْ أَنْهَ عَنِ الْخَلُوقِ؟ ». وَنَخَسَنِى بِقَضِيبٍ فِى يَدِهِ فِى بَطْنِى فَأَوْجَعَنِى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الْقِصَاصَ قَالَ الْقِصَاصَ فَكَشَفَ لِى عَنْ بَطْنِهِ فَجَعَلْتُ أُقَبِّلُهُ ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَدَعُهُ شَفَاعَةً لِى يَوْمَ الْقِيَامَةِ (سنن الكبري للبيهقي

ஸவாத் இப்னு அம்ர் ரழி அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் தடுத்த ஒரு நறுமணத்தைப் பூசிய படி நான் வந்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்த போது அவர்களின் கையில் வைத்திருந்த குச்சியைக் கொண்டு என் வயிற்றில் இடித்து விட்டார்கள். எனக்கு வலித்தது. நான் அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே என்னை அடித்ததற்கு நான் உங்களைப் பழி வாங்க வேண்டும் என்றேன். நபி(ஸல்)அவர்கள் தன் வயிற்றைத் திறந்து காட்டினார்கள், நான் அவர்களின் வயிற்றை முத்தமிட்டு, யாரஸூலல்லாஹ் மறுமையில் என் சிபாரிசுக்காக விட்டு வைக்கிறேன் என்றேன்

Комментарии

Информация по комментариям в разработке